Home Cinema News ‘தளபதி 69’ஐ இயக்கும் ‘சதுரங்க வேட்டை’ புகழ் ஹெச்.வினோத்… இதற்கு இசையமைக்கப்போவது யார் தெரியுமா?

‘தளபதி 69’ஐ இயக்கும் ‘சதுரங்க வேட்டை’ புகழ் ஹெச்.வினோத்… இதற்கு இசையமைக்கப்போவது யார் தெரியுமா?

by Sivaanantham RB

கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய்யின் கைவசம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ மற்றும் இயக்குநர் ஹெச்.வினோத்தின் படம் என இரண்டு படங்கள் மட்டுமே உள்ளது. 

இதில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தை  பிரபல நடிகரும், இயக்குநருமான வெங்கட் பிரபு இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் விஜய்-க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி டூயட் பாடி ஆடி வருகிறார். 

இப்படத்திற்கு பிறகு ‘சதுரங்க வேட்டை’ புகழ் ஹெச்.வினோத் இயக்கப்போகும் ‘தளபதி 69’ படத்தை D.V.V. தானய்யாவின் ‘DVV எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ நிறுவனம் அதிக பொருட்செலவில்  தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாம், இது விஜய்யின் திரையுலக வாழ்வில் கடைசி படம் என்பதாலும், அவர் ஹெச்.வினோத்துடன் கூட்டணி அமைக்கும் முதல் படம் என்பதாலும், ஆடியன்ஸின் எக்ஸ்பெக்டேஷன் மிக அதிகமாக உள்ளது.

vijay anirudh

தற்போது, இந்த படத்துக்கு 2K கிட்ஸின் ஃபேவரைட் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இம்மாத இறுதியில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.