அபிஷன்ஜீவிந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள Tourist Family படத்தின் இனிமையான மெல்லிசை பாடலான முகை மலை பாடல் இன்று வெளியாகியுள்ளது. மோகன் ராஜன் இப்பாடலுக்கு லிரிக்ஸ் எழுதி உள்ளார். ஷான் ரோல்டன் மற்றும் சைந்தவி இணைந்து இப்பாடலை இனிமையான குரலில் பாடி இப்பாடலுக்கு இன்னிசை கொடுத்துள்ளார். சமீபத்தில் Tourist Family படத்தின் ட்ரைலர் வீடியோ இணையதளத்தில் வெளியாகி மக்களிடையில் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில், தற்போது இதன் முகை மலை பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சுப்ரமணியபுரம், அயோத்தி, கருடன் போன்ற படங்களில் முன்னணி நடிகராக நடித்துள்ள நடிகர் சசிகுமார் முன்னணி நடிகையான சிம்ரனுடன் இணைந்து Tourist Family படத்தில் நடுத்தர வயது தம்பதியர்களாகவும் இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோர்களாகவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரைலர் மூலம் கணவன் மனைவி தன் குழந்தைகளுடன் குடும்பமாக சேர்ந்து சந்தோசமாக வாழ்வது போலவும் ஏதோ ஒரு காரணத்திற்காக அவர்கள் ஊரை விட்டு வெளியேறி செல்வது போலவும் தெரிகிறது. இப்படம் முழுவது குடும்ப நாடக கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#TouristFamily – First single ‘முகை மழை’ Out Now 🎶
— Sugumar Srinivasan (@Sugumar_Tweetz) February 21, 2025
அருமையான பாடல் ♥️
▶️https://t.co/uiGKWOCjsZ pic.twitter.com/1a5ySN1Hgw
இவர்கள் குடும்பத்துடன் சேர்ந்து சந்தோசமாக வாழும் தருணங்களும் இப்படத்தில் சசிகுமார் சிம்ரன் காதல் தருணங்களும் முகை மலை பாடலின் மூலம் நிரப்பப்பட்டு அழகாக காட்டபட்டுள்ளது. இப்பாடல் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் அழகாகவும் இனிமையாகவும் இருக்கிறது. அழகிய மழலை இசை கொண்ட Tourist Family படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tourist Family படக்குழு
நடிகர்கள் | சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, மிதுன் ஜெய் சங்கர் |
இயக்குனர் | அபிஷன் ஜீவிந்த் |
தயாரிப்பு | நாசரத் பசிலியன், மகேஷ் ராஜ், பசிலியன் & யுவராஜ் கணேசன் |
இசையமைப்பாளர் | ஷான் ரோல்டன். |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]