அறிமுக இயக்குனர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில் நடிகர் விவேக் பிரசன்னா, பிரத்து, சாந்தினி, பூர்ணிமா ரவி நடித்துள்ள ‘Trauma’ திரைப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது. 1 நிமிடம் 57 வினாடிகள் கொண்ட இந்த ட்ரைலர் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ரசிகர்களை கவரும் வண்ணம் முன்வைக்கப்பட்டுள்ளது.
Read More: நடிகர் வைபவ் நடித்துள்ள பெருசு (Perusu) திரைப்படத்தின் ட்ரைலர் இணையதளங்களில் வைரல்!
‘Trauma’ – ட்ரைலர்
இந்த படத்தில் இரு ஜோடிகள் காண்பிக்கப்படுகின்றனர், அதில் ஒரு ஜோடி திருமணம் ஆனவர்கள் மற்றொரு ஜோடி தங்களின் வாழ்க்கையை தொடங்கும் தருவாயில் இருக்கின்றனர். அவர்களின் இரு வேறு உலகம் ஒரு குற்றத்தால் நேருக்கு நேர் சந்தித்து கொள்வது போல் காட்சிகள் குறிக்கிறது. மேலும் ஒரு இதில் அரங்கேறும் எதிர்பாராத கொலை, யார் யாரை கொன்றார்? யாரின் வாழ்க்கை விதி என்ற சூழலில் சிக்கியுள்ளது? இதில் குற்றமற்றவர் யாராக இருக்கக்கூடும்? இவை அனைத்தும் நிகழ என்ன காரணம்? இது போன்ற எண்ணிலடங்கா வினாக்களை எழுப்புகிறது இந்த படத்தின் ட்ரைலர். தற்போது த்ரில்லர் படங்கள் கோலிவுட் சினிமாவில் கொடிகட்டி பறந்து வரும் காரணத்தால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Read More: March 2025 – திரையரங்கில் வெளியாக உள்ள தமிழ் திரைப்படங்கள்
Trauma – படக்குழு
நடிகர்கள் | விவேக் பிரசன்னா, சாந்தினி, பிரத்து, பூர்ணிமா, அனந்த் நாக் |
இயக்குனர் | தம்பிதுரை மாரியப்பன் |
தயாரிப்பு | Turm Production House |
இசை | RS ராஜ் பிரதாப் |
வெளியாகும் நாள் | 21 மார்ச் 2025 |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]