புதுமையான கதைகளை கூறும் இயக்குனர்கள் அதை ஆரத்தழுவி ஏற்றுக்கொள்ளும் ரசிகர்கள் காலம் மாறினாலும் இருப்பது நூறு சதவீதம் உண்மை. அப்படி இன்று வெளியான புத்தம் புதிய தமிழ் திரைப்படம் “Trending”ன் first look போஸ்டர் இளைஞர்கள் மற்றும் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
யார் இந்த “Trending” இயக்குனர்?
இந்த படத்தை சிவராஜ் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார். இதற்கு முன் சிலந்தி என்ற குறும்படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார், மேலும் வஜ்ர வியூகம் (நாவல்),காரிச்சாமியும் செவலக்காளையும் (சிறுகதை தொகுப்பு) போன்ற புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். இந்த எழுத்து பின்னணி அவரின் தற்போது வெளியாக உள்ள “Trending” படத்தில் மிகவும் சிறப்பான முறையில் அமையும் என்று பலர் கூறி வருகின்றனர்.
Trending – first look போஸ்டர், படக்குழு
தற்போது இருக்கும் இணைய தள காலத்தில் ஏராளமான couple vloggers-ஐ நாம் அன்றாடம் கண்டு வருகிறோம். “Trending” first look போஸ்டர் அந்த பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை விவரிக்கும் வண்ணம் உள்ளது. அதில் கதாநாயகன் கலையரசன் “அர்ஜுன்” என்ற பாத்திரத்திலும், நாயகி ப்ரியா “மீரா” என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர் என்பது தெரியவருகிறது. YouTube தளத்தின் அம்சங்கள் ஆன லைக், ஷேர், கமெண்ட் பாக்ஸ், எமோஜி, thumbnail என எல்லா விவரங்களும் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குனர் | சிவராஜ் |
நடிகர்கள் | கலையரசன், பிரியா, பிரேம் குமார், பெசன்ட் ரவி |
இசை | சாம் CS |
தயாரிப்பு | Ram Film Factory Production BareFoot Production |