தமிழ் சினிமாவில் நாயகியாக நடிப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்றாலும், அதில் 22 ஆண்டுகளாக முன்னணி கதாநாயகியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. இவரின் பயணம் 1999-ஆம் ஆண்டு வெளியான ‘ஜோடி’ என்ற நடிகர் பிரஷாந்த் திரைப்படத்தில் துணை நடிகையாக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார் என்று அனைவரும் அறிவர்.
ஆனால் அவர் தான் அடுத்த பல ஆண்டுகளாக முன்னணி கதாநாயகியாக வலம் வருவார் என்று நினைத்து பார்த்திருக்க இயலாது.
Honoured to be part of this magic called cinema for 22 years😇🧿
— Trish (@trishtrashers) December 13, 2024
Thank you all🙏🏻
13.12♥️ pic.twitter.com/AMC0LUzNma
‘Suriya 45’-ல் நடிகை திரிஷா
வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை நிரூபிக்க நம் அனைவரின் வாழ்விலும் பல நிகழ்வுகள் நிகழ்ந்திருக்கும் அதுபோலவே, நடிகை திரிஷா முதன் முதலில் முன்னணி நாயகியாக நடித்த திரைப்படம் “மௌனம் பேசியதே”. இந்த திரைப்படம் 2002 ஆம் ஆண்டு இயக்குனர் அமீர் இயக்கத்தில் நடிகர் சூர்யா கதாநாயகன் ஆக நடித்து வெளியானது. இதில் யுவன் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் super duper ஹிட் ஆனது. இன்றளவும் பல 90ஸ் இளைஞர்களின் இதய கீதம் என்றே கூறலாம்.
சூர்யா மற்றும் திரிஷாவின் வெற்றிக் கூட்டணி 2005-ல் இயக்குனர் ஹரி உருவாக்கிய “ஆறு” படத்தில் தொடர்ந்தது. வணிக ரீதியாக இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றது அதன் பிறகு இந்த இருவரும் இணைந்து எந்த படத்திலும் நடிக்கவில்லை.
19 ஆண்டுகள் கழித்து தற்போது RJ பாலாஜி இயக்கும் ‘Suriya 45’ படத்தில் திரிஷா நடிக்கவுள்ளதாக பரவலாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு ரசிகர்களின் nostalgic சிறுவயது நினைவை திரும்ப கொண்டு வரும் வண்ணம் உள்ளதாக இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
புது முகங்கள் பலர் இன்று தமிழ் உட்பட பல மொழிகளில் அறிமுகமானாலும், இதற்கு முன் நடித்த பல nostalgic காம்போக்களை மீண்டும் மீண்டும் காண பல 90ஸ் மற்றும் early 2k கிட்ஸ் இளைஞர்கள் மிகவும் ஆர்வத்துடன் உள்ளனர் என்பது பெரும்பான்மையான கருத்து.
“Suriya – 45” – அதிகாரபூர்வ படக்குழு
- இயக்குனர் – RJ பாலாஜி
- நடிகர்கள் – சூர்யா, திரிஷா
- இசை – சாய் அபியங்கர்
- தயாரிப்பு – Dream Warriors Pictures