Home Cinema News 2025ல் மாஸ் காட்டவிருக்கும் நடிகை Trishaவின் திரைப்படங்கள்!

2025ல் மாஸ் காட்டவிருக்கும் நடிகை Trishaவின் திரைப்படங்கள்!

தென்னிந்திய சினிமாவின் ராணி என்று அழைக்கப்படும் நடிகர் Trisha இந்த ஆண்டு பல்வேறு மொழிகளில் ஏராளமான திரைப்படங்களை தனது கை வசம் வைத்துள்ளார்.

by Shanmuga Lakshmi

பொதுவாக சினிமா துறையில் கதாநாயகிகள் குறிப்பிட்ட வயதிற்கு பிறகு துணை நடிகை, அக்கா தங்கை, அம்மா கதாபாத்திரங்களில் நடிப்பது தான் வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் தற்காலத்தில் அந்த வரையறை மாறியுள்ளது, ஒரு முன்னணி நாயகியாக நடிக்க அவரது வயது ஒரு தடையில்லை என்று நிரூபித்து வரும் பல நடிகைகளில் மிகவும் முக்கியமானவர் ‘நடிகை Trisha’. 2002ல் வெளியான ‘மௌனம் பேசியதே’ திரைப்படத்தில் தொடங்கிய இவரின் பயணம், கோலிவுட்டில் பல நடிகர்களுக்கு இணையாக இருபத்தி மூன்று ஆண்டுகள் கதாநாயகியாக நடித்து வரும் ஒரே நடிகை திரிஷா ஆகும். 

தென்னிந்திய சினிமாவில் அனைத்து மாஸ் ஹீரோக்கள் முதல் இந்த கால புதுமுக நடிகர்கள் வரை நடித்து வருகிறார். 2016 ஆம் ஆண்டிற்கு பிறகு திரிஷா அவர்களின் திரைப்படவியலை உற்று நோக்கினால், நாயகிகளை மையப்படுத்திய கதைகளை தேர்ந்தெடுத்து வருகிறார். அவரின் நடிப்பில் 2025 ஆம் ஆண்டு பல மொழிகளில் வெளியாகும் திரைப்படங்களின் பட்டியலை காண்போம்.

Read More: தமிழ் சினிமாவில் 24 மணி நேரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட டீஸர்களின் பட்டியல்!

1.குட் பேட் அக்லி 

கோலிவுட் வட்டாரத்தில் வெற்றி கூட்டணியாக இருக்கும் ஜோடி நடிகர் அஜித் குமார் & நடிகை திரிஷா. அவர்கள் நடிப்பில் ஏற்கனவே ‘விடாமுயற்சி’ திரைப்படம் வெளியானது. எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இல்லை என்றாலும், ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வெள்ளித் திரைக்கு வரவிருக்கும் அடுத்த அதிரடி திரைப்படம் ‘குட் பேட் அக்லி’.

  • நடிகர்கள் – அஜித் குமார், திரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், பிரபு 
  • இயக்குனர் – ஆதிக் ரவிச்சந்திரன் 
  • தயாரிப்பு – Mythri Movie Makers 
  • வெளியாகும் நாள் – 10 ஏப்ரல் 2025

Read More: நடிகர் Ravi Mohan நடிப்பில் 2025 ல் வெளியாகும் திரைப்படங்கள் 

2.தக் லைஃப் 

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பல்வேறு கோலிவுட் மற்றும் பிற மொழி நட்சத்திர பட்டாளம் நடித்த ஆக்ஷன் டிராமா திரைப்படம் தான் ‘தக் லைஃப்’. 

  • நடிகர்கள் – கமல்ஹாசன், திரிஷா, சிலம்பரசன், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ், அபிராமி 
  • இயக்குனர் – மணிரத்னம்
  • தயாரிப்பு – Madras Talkies, Raaj Kamal Films International, Red Giant Movies 
  • வெளியாகும் நாள் – 5 ஜூன் 2025
  • மொழி – தமிழ்  

3.Suriya 45

இருபது வருடங்களுக்கு பிறகு வெள்ளித்திரையில் இணையும் நடிகை த்ரிஷா மற்றும் நடிகர் சூர்யா நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக ‘Suriya 45’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

  • நடிகர்கள் – சூர்யா, திரிஷா, யோகி பாபு 
  • இயக்குனர் – RJ பாலாஜி 
  • தயாரிப்பு – Dream Warrior Pictures  
  • வெளியாகும் நாள் – 2025
  • மொழி – தமிழ்  

Read More: நடிகர் Dhanush-ன் நடிப்பில் 2025ல் வரவிருக்கும் திரைப்படங்கள் இத்தனையா!

4.ராம் [மலையாளம்]

மிகச்சிறந்த முன்னால் ரகசிய ஏஜென்ட் ராம் மோகன் உதவியை வைத்து ஒரு பயங்கரவாத கும்பலின் திட்டத்தை முறியடிக்க நினைக்கும் முயற்சியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

  •  நடிகர்கள் – மோகன்லால், திரிஷா, சந்துநாத், இந்திரஜித் சுகுமாரன் 
  • இயக்குனர் – ஜீத்து ஜோசப் 
  • தயாரிப்பு – Peacock Film Production, Passion Studios, Abhishek Films   
  • வெளியாகும் நாள் – 2025
  • மொழி – மலையாளம்  

5.விஸ்வம்பரா [தெலுங்கு]

பாண்டஸி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வரும் திரைப்படம் ‘விஸ்வம்பரா’. பூலோகம், தெய்வங்கள் வாழும் உலகம் என பல உலகங்களை கடந்து பிறக்கும் ஒரு இளவரசரின் பயணத்தை மையமாக உருவாக்கப்பட்டுள்ளது.

  • நடிகர்கள் – திரிஷா, சிரஞ்சீவி, குணால் கபூர், மீனாட்சி சவுதரி, ஆஷிகா ரங்கனாத்   
  • இயக்குனர் – மல்லிடி வஷிஷ்டா  
  • தயாரிப்பு – UV Creations 
  • வெளியாகும் நாள் – 9 மே 2025
  • மொழி – தெலுங்கு

Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

©2025 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.