கருப்பையா முருகன் இயக்கத்தில் நடிகர் பிரேம்ஜி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள புதிய திரைப்படம் வல்லமை. இப்படத்திற்கான ட்ரைலர் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது! இப்படம் ஒரு பொறுப்புணர்வுள்ள பாசமான தந்தையையும் ஒரு பெண் குழந்தையையும் மையப்படுத்துதி உருவாக்கப்பட்ட படம் போன்று இப்படத்தின் ட்ரைலர் மூலம் தெரிகிறது. இப்படம் சஸ்பென்ஸ் நிறைந்த ஆக்ஷன் படமாகவும் பெண் குழந்தைகளை கொண்டு முக்கியமான கருத்து ஒன்றை கூறும் படமாகவும் அமையும் என்று எதிர்பார்க்க படுகிறது. மேலும் இப்படத்தில் திவ்யதர்ஷினி மற்றும் தீபா ஷங்கர் போன்ற பல நடிகர்கள் நடித்துள்ளனர்.
Happy to launch the teaser of #VALLAMAI Directed by #KaruppaiyaaMurugan@KMurugan_Dir
— venkat prabhu (@vp_offl) February 18, 2025
Congrats to@Premgiamaren
😍and team 📷@GKV_music_dir@soorajnallusami@actorrajith @onlynikil #Divyadharshinihttps://t.co/3Sd1LtTn1m pic.twitter.com/bv73j4fKr6
துணை கதாபாத்திரங்களிலில் மட்டும் நகைச்சுவை நடிகராக நடித்துக்கொண்டிருந்த பிரேம்ஜி தற்போது முன்னணி கதாபாத்திரங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார். ‘சத்ய சோதனை’ படத்திற்கு பிறகு பிரேம்ஜி நடித்துள்ள புதிய திரைப்படம் ‘வல்லமை’. மேலும் பிரேம்ஜி நடிகர் மட்டுமல்ல இவர் ஒரு பாடகர், இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை 600028, மங்காத்தா போன்ற படங்களில் இவர் நடித்து அசத்தியுள்ளார்.
பிரேம்ஜி நடித்துள்ள மற்ற படங்கள் போலவே வல்லமை படத்திலும் இவர் இவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் பிரமாதமாக நடித்திருப்பார் என்று எதிர்பார்க்க படுகிறது. மேலும் இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வல்லமை படக்குழு
நடிகர்கள் | பிரேம்ஜி, திவ்யதர்ஷினி, தீபா சங்கர், வலக்கு என் முத்துராமன், CR ராஜித், சூப்பர்குட் சுப்பரமணி, சுப்பிரமணியன் மதவன் மற்றும் விது. |
இயக்குனர் | கருப்பையா முருகன். |
இசை இயக்குனர் | ஜி.கே.வி. |
பாடகர் | வெங்கட் பிரபு |
தயாரிப்பாளர் | கருப்பையா முருகன். |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]