Home Cinema News பாலா – அருண் விஜய்யின் ‘வணங்கான்’ டிரெய்லர் வெளியாகியுள்ளது! 

பாலா – அருண் விஜய்யின் ‘வணங்கான்’ டிரெய்லர் வெளியாகியுள்ளது! 

அருண் விஜய் நடித்து பாலி இயக்கிய படம் ‘வணங்கான்’. இந்த படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.

by Vinodhini Kumar

இயக்குனர் பாலா தன்னுடைய இயல்பான கதைக்களத்தில் நடிகர் அருண் விஜய், சமுத்திரக்கனி, மிஷ்கின், ரோஷினி பிரகாஷ், ரிதா நடித்துள்ளனர். ‘வணங்கான்’ படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. 

டிரெய்லரில் பல சண்டை காட்சிகள், ஒரு குற்றம் அதை சுற்றி நடக்கும் எதிர்பாராத திருப்பங்கள் தான் கதை என தெரிகிறது. இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் ‘Vanangaan’ படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. 

வணங்கான் movie poster

ஒரு க்ரைம் கதைக்கு தேவையான பின்னணி இசையை தந்துள்ளார் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ். குருதேவ் உடைய ஒளிப்பதிவில் இயக்குனர் பாலாவின் படத்துக்கான தனித்தன்மை தெரிகிறது. நடிகர் சூரியாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவருக்கு பதிலாக நடிகர் அருண் விஜயை வைத்து எடுத்துள்ளார். இருவருக்கும் ‘வணங்கான்’ ஒரு வெற்றி படமாக அமையும் என நம்பலாம். 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.