தமிழ் சினிமாவில் தனது தரமான கதை மற்றும் திரைக்கதையால் “பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, மற்றும் சித்தா” போன்ற படங்களின் வாயிலாக முத்திரை பதித்த இயக்குனர் S.U.அருண் குமார் முதல் முறையாக நடிகர் விக்ரமுடன் இணைந்துள்ளார். இந்த படத்திற்கு “Veera Dheera Sooran: Part 2” என்று தலைப்பு அமைக்கப்பட்டுள்ளது. கோலிவுட்டில் ஒரு புது முயற்சியாக இரண்டாம் பாகத்தை முதலில் வெளியிட்டு அதன் பின்னர் முதல் பாகத்திற்கான கதையை மக்களிடம் கூறவேண்டும் என்று இந்த படத்தின் இயக்குனர் முடிவு செய்துள்ளார். இதுவரை வெளியான போஸ்டரில் நடிகர் விக்ரம் ஒரு மிரட்டலான action ஹீரோவாக நடித்துள்ளார் என்பது தெரியவருகிறது. வில்லனாக நடிப்பு அரக்கன் என்று அழைக்கப்படும் SJ சூர்யா நடித்துள்ளார்.
Veera Dheera Sooran-Part 2 டீசர்
நடிகர் விக்ரம் மற்றும் நடிகை துஷாரா விஜயன் இணைந்து நடிக்கும் “Veera Dheera Sooran: Part 2” திரைப்படத்தின் டீசர் வெற்றிகரமாக வெளியாகியுள்ளது. கிராம பின்னணியில் வாழும் நடுத்தர குடும்பத்தலைவன் போன்ற கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரம், அவரின் மனைவியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார்.
சுமுகமாக சென்று கொண்டிருக்கும் அவர்களின் வாழ்க்கையில் எதிர்பாரா ஏதோ ஒரு சம்பவம் அமைதியாக இருக்கும் ‘காளி’ என்ற விக்ரம் கதாபாத்திரம் விஸ்வரூபம் எடுத்து, அரக்கன் போன்ற மிரட்டும் தொனியில் இருக்கும் காவல்துறை அதிகாரியான SJ சூர்யாவை எதிர்க்கிறார். காளி கதாபாத்திரத்திற்கு உதவி புரிவது போன்ற காட்சிகளில் மலையாள சினிமாவின் முன்னணி நாயகன் சூரஜ் வெஞ்சரமூடு தோன்றியுள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூடியுள்ளது.
கதாநாயகன் துரோகத்தால் வீழ்த்தப்படுகிறாரா அல்லது அதிகாரத்தின் வலையில் சிக்கிக்கொண்டு அதில் இருந்து தப்பிக்க முயற்சி செய்கிறாரா? என பல கோணங்களில் தற்போது சினிமா ஆர்வலர்கள் decode செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
இதற்கு விரைவில் பதிலை கூறவே ஜனவரி 2025-ல் வெளியாகும் என்ற தகவலையும் டீசரில் குறிப்பிட்டுள்ளனர். அநேகமாக பொங்கலுக்கு வெளியாகும் பல படங்களுடன் நடிகர் விக்ரமின் ‘Veera Dheera Sooran – Part 2’ களம் காணும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
“Veera Dheera Sooran: Part 2” படக்குழு
இயக்குனர் | S.U.அருண் குமார் |
நடிகர்கள் | விக்ரம் துஷாரா விஜயன் SJ சூர்யா சூரஜ் வெஞ்சரமூடு |
இசை | ஜி.வி.பிரகாஷ் |
வெளியாகும் நாள் | ஜனவரி 2025 |