Home Cinema News 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தேசிங்கு ராஜாவாக Vemal…

11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தேசிங்கு ராஜாவாக Vemal…

எழில் இயக்கத்தில் 2013-ல் Vemal நடிப்பில் வெளியான தேசிங்கு ராஜா படம் காமெடி கலந்து  ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றநிலையில் அதன் 2-வது பாகம் விரைவில் வெளியாகவுள்ளது.  

by Sudhakaran Eswaran

எழில் இயக்கத்தில் 2013-ல் Vemal நடிப்பில் வெளியான தேசிங்கு ராஜா படம் காமெடி கலந்து  ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றநிலையில் அதன் 2-வது பாகம் விரைவில் வெளியாகவுள்ளது.  

ஆரம்ப காலத்தில் துணைநடிகராக நடித்து வந்த Vemal பசங்க படத்தின் மூலம் கதாநாயகனை அறிமுகமானார். பின்னர் களவாணி, தூங்க நகரம், வாகை சூட வா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, கலகலப்பு போன்ற வெற்றி படங்களை தந்துள்ளார். 

விஜய், அஜித், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி போன்ற ஹீரோக்களை வைத்து சூப்பர் ஹிட் படங்களை தந்த எழில் தேசிங்கு ராஜா முதல் பாகத்தை எடுத்திருந்தார். அவரே இரண்டாவது பாகத்தையும் எடுக்கவிருப்பதாக கூறப்படுகிறது. 

முதல் பாகம் எப்படி காமெடி கலந்த கதைக்களத்தில் எடுக்கப்பட்டதோ அதே போல இரண்டாவது பாகமும் முதல் பாகத்தின் கதையில் இருந்து வித்தியாசமாக எடுக்க உள்ளதாக இயக்குனர் கூறியிருந்தார். ஜனவரி மாதம் படபிடிப்பு பூஜை செய்து தொடங்கப்பட்டது. 

தெலுங்கு நடிகைகள் பூஜிதா பொன்னாடா, ஹர்ஷிதா மாற்றுமல்லாமல் சிங்கம் புலி, ரோபோ சங்கர், ரவி மரியா, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, மதுரை முத்து, மதுமிதா, குக் வித் கோமாளி புகழ், ஹர்ஷிதா போன்ற காமெடி பட்டாளமே நடிக்கவிருப்பதாக தெரிகிறது. 

படத்தை இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் பி.ரவிசந்திரன் தயாரிக்வுள்ளார். பூவெல்லாம் உன் வாசம் படத்திற்கு பிறகு  மிக நீண்ட இடைவெளியில் இயக்குனர் எழிலுடன் இந்த படத்தில் இணையவுள்ளார் இசையமைப்பாளர் வித்யா சாகர். 

434255194 1677574722775086 7382697557507640090 n

முதல் பாகத்தில்  சூரி, சிங்கம் புலி காமெடியில் கலக்கியிருந்த நிலையில் இரண்டாவது பக்கத்திலும் காமெடிக்கு பஞ்சம்  எதிர்பார்க்கலாம். விமல் தற்போது SIR படத்தில் நடித்து வருகிறார்.

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.