சின்னத்திரையில் பல பாத்திரங்களில் நடித்து, சிலபல திரைப்படங்களில் துணை வேடங்களிலும் நடித்துள்ள போஸ் வெங்கட், இந்த படத்தை இயக்கியுள்ளார். நடிகர் விமல் நடிக்கும் ‘சார்’ படம் பெயர் மாற்றப்பட்டு இப்போது வெளியாக உள்ளது.
![நடிகர் விமல் நடிக்கும் ‘SIR' படத்தின் பாடல் வெளியாகியுள்ளது! 2 SIR movie Panangarukka song](https://www.kollywoodglam.com/wp-content/uploads/2024/07/Panangarukka-SIR-movie-song-658x1024.jpeg)
‘ஜோ’ படத்தின் இசையமைப்பாளர் சித்து குமார் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். இன்று வெளியாகியுள்ள பாடலை ஜி வி பிரகாஷ் மற்றும் சைந்தவி பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘பனங்கருக்கா’ என்ற பாடலை கவிஞர் விவேகா எழுதியுள்ளார்.
இந்த படத்தை SSS நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் நிறுவனம் வெளியிடுகிறது. சமீபத்தில் ‘SIR’ படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்தது. கல்வியின் முக்கியத்துவம் மற்றும் சாதி பிரிவினை பற்றி பேசும் படமாக இது அமைந்துள்ளது.