தமிழில் ‘தேசிங்கு ராஜா’, ‘களவாணி’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘வாகை சூடவா’ போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் விமல். 2024ல் ‘SIR’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டீஸர் தற்போது வெளியாகி உள்ளது.

இந்த படத்தை போஸ் வெங்கட் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். நடிகர்கள் விமல், சாயா தேவி கண்ணன், சிராஜ் S, சரவணன், ரமா, ஜெயபாலன் நடித்துள்ளனர். படத்தை இயக்குனர் வெற்றிமாறன் வழங்க, சிராஜ் S, SSS பிக்சர்ஸ் இணைந்து தயாரித்து உள்ளார்கள்.
தமிழ்நாட்டில் கல்வி அனைவருக்கும் எப்படி சேர்ந்தது, கல்வியின் முக்கியத்துவம் பற்றிய படமாக தெரிகிறது. ‘சார்’ படத்தின் கதைக்களம் கல்வியை கடவுள் நம்பிக்கை என்ற பெயரில் எதிர்க்கும் ஒரு கிராமம். அதில் நடிகர் விமல் ஆசிரியராக நடித்துள்ளார். இதற்கு முன் வாகை சூடவா படத்தில் கல்வியின் அத்தியாவசியத்தை உணர்த்தும் ஆசிரியராக நடித்திருப்பார்.
The Teacher Returns ! The teaser of the movie #SIR has been released by Director @karthiksubbaraj and Actor @Karthi_Offl
— Bose Venkat (@DirectorBose) June 19, 2024
Here the teaser link 🔗 https://t.co/PeiCqKhXn1
Directed by @DirectorBose starring @ActorVemal and produced by @sirajsfocuss
Vetrimaaran
ஒட்டுமொத்த கிராமத்துக்கும் கல்வி சேராமல் இருப்பதும், பள்ளிக்கூடத்தை எதிர்த்து நிற்கும் ஒரு சிலரின் சூழ்ச்சிகளை சமாலிப்பதாக உள்ளது கதை. சாதி, மதம் என பாகுபாடுகளால் சாமானிய மக்களுக்கு கல்வி போய் சேர்மத்தை பேசும் படமாக டீஸரில் தெரிகிறது ‘சார்’.
ஏற்கனவே ம.போ.சி என பெயரிடப்பட்டு இருந்த இந்த படம், சில காரணங்களால் ‘SIR’ என தலைப்பிட்டு தற்போது டீஸர் வெளியாகி உள்ளது. இந்த டீஸரை நடிகர் கார்த்தி மற்றும் கார்த்திக் சுப்பராஜ் வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]