Home Cinema News ஆகஸ்ட் 31-ல் தல, தளபதி படங்கள் அப்டேட் குறித்து போஸ்ட் செய்த Venkat Prabhu

ஆகஸ்ட் 31-ல் தல, தளபதி படங்கள் அப்டேட் குறித்து போஸ்ட் செய்த Venkat Prabhu

தல, தளபதி என இரண்டு சூப்பர்ஸ்டார் ஹீரோக்களை வைத்து இயக்கியுள்ள இயக்குனர் Venkat Prabhu அதற்க்கான போஸ்டர் ஒன்றை வெளியிட்டு மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

by Sudhakaran Eswaran

தல, தளபதி என இரண்டு சூப்பர்ஸ்டார் ஹீரோக்களை வைத்து இயக்கியுள்ள இயக்குனர் Venkat Prabhu அதற்க்கான போஸ்டர் ஒன்றை வெளியிட்டு மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

சென்னை 28, சரோஜா, கோவா, மங்காத்தா, மாநாடு போன்ற வெற்றிப்படங்களை தந்தவர் Venkat Prabhu. இவரது படங்கள் என்றாலே ஒரு விதமான எதிர்பார்ப்பு கட்டாயம் ஏற்படும். 

இவரது படங்களில் பெரும்பாலும் குறிப்பிட்ட சில ஹீரோக்கள் கட்டாயம் நடித்திருப்பார்கள். அதே போல யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்திருப்பார். இவை அனைத்தும் வெங்கட் பிரபு படங்களில் எழுதப்படாத விதி என்றே கூறலாம். 

அந்த வகையில் 2011 -ல் அஜித்குமாரை வைத்து மங்காத்தா என்ற சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை தந்தார். Venkat Prabhu காரியரிலும்  சரி, அஜித்குமார் காரியரிலும் சரி இந்த படம் முக்கிய படமாக இருந்தது. 

இதுவரை அஜித்குமார், விஜய் என இருவரையும் வைத்து இயக்கிய இயக்குனர்கள் என்று பார்த்தால் SJ. சூர்யா, முருகதாஸ், KS. ரவிக்குமார், வசந்த், L. விஜய், விக்ரமன், எழில், பேரரசு தற்போது கடைசியாக இவர்களுடன் இணைந்தவர் வெங்கட் பிரபு.

அஜித்குமாரை வைத்து மங்காத்தா படத்தை தந்த பிறகு தற்போது விஜய்யை வைத்து GOAT படத்தை எடுத்துள்ளார். இந்த படம் மங்காத்தா படத்தை விட சிறப்பாக இருக்கும் என்று கூறியிருந்தார். 

ஆகஸ்ட் 31 2011 – ல் மங்காத்தா படம் ரிலீஸ் ஆனது, இந்த ஆண்டு அதே நாளில் GOAT படத்தின் 4th Single குறித்து அப்டேட் வரவுள்ளது எனவும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பிறந்த நாள் ஆகஸ்ட் 31 என மூன்று விஷயங்களை கூறியுள்ளார்.  

இந்த மூன்று விஷயங்களும் தனி தனியாக நடந்தாலே கொண்டாடி வரும் ரசிகர்கள் ஒரே நாளில் நடக்கவுள்ளது என்ற வெங்கட் பிரபு X தளத்தில் பதிவிட்டது ரசிகர்கள் மத்தியில் வரவேற்க்கப்பட்டது.  

Venkat Prabhu about GOAT 4th single

மேலும் GOAT படத்தின் 4th சிங்கள் அப்டேட் குறித்து “மட்ட” என்று பதிவிட்டுள்ளார். விஜய் சட்டையின் காலரை கடித்துக்கொண்டு இருப்பது போல புகைப்படம் வெளியிட்டிருந்தார். 

மங்காத்தா ரிலீஸ் , யுவன் பிறந்த நாள், GOAT பட அப்டேட் என ஆகஸ்ட் 31 வெங்கட் பிரபு வாழ்வில் முக்கியமான நாளாக இருக்கும். 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.