ஒரு சில இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் இணைத்து பணியாற்றும் போது ஒரு வித எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அந்தவகையில் வெங்கட் பிரபு, யுவன் கூட்டணி இளைஞர்களால் அதிகம் எதிர்பார்ப்பை தருகிறது.
Venkat Prabhu படங்கள் என்றாலே ஒரு வித உற்சாகமும்,எதிர்பார்ப்பும் இளைஞர்கள் மத்தியில் ஏற்படுகிறது. இதற்க்கு காரணம் இளைஞர்களை ஈர்க்கும் விதமான காட்சிகள், அவர்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் கதைகள் என படத்தை இயக்கி வருகிறார். இவருடன் யுவன் சங்கர் ராஜா இணையும் போது சொல்லவே வேண்டியதில்லை. நிச்சயம் சம்பவம் செய்திருப்பார்கள். அந்தவகையில் இருவரும் இணைந்து பணியாற்றிய படங்கள்.

சென்னை 600028

வெங்கட் பிரபு முதன் முதலில் இயக்கிய படமான சென்னை 600028-ல் சிவா, ஜெய், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், நிதின் சத்யா என புதுமுக நடிகர்களை வைத்து எடுத்தார். சென்னையை மையமாக கொண்டு கிரிக்கெட் விளையாடும் இரு அணிகளுக்கிடையே நடக்கும் சுவாரசியமான நிகழ்வை இளைஞர்கள் ரசிக்கும் படி எடுத்திருப்பார். காமெடி, காதல், நண்பர்களுக்கு இடையேயான மன கசப்பு என தான் எடுத்த முதல் படமே ஹிட் அடித்தது. யுவன் சங்கர் ராஜா தனது பங்கிற்கு இசையில் மிரட்டியிருப்பார். “சரோஜா சமன் நிக்கலோ”, “ஜல்சா பண்ணுங்கடா” பாடல்கள் குத்தாட்டம் போடா வைத்தது.
சரோஜா

வெங்கட் பிரபு அடுத்த படமான சரோஜாவில் சிவா, பிரேம்ஜி, வைபவ், எஸ்.பி. சரண், போஸ் வெங்கட் ஆகியோர் நடித்திருந்தனர். பல திருப்பங்கள் கொண்டு கதையை வித்தியாசமாக எடுத்திருந்தார். யுவன் இசையில் “கோடான கோடி”, “தோஸ்து பட தோஸ்து” ரசிக்கும் படியாக இன்றளவும் இருந்து வருகிறது.
கோவா

வெங்கட் பிரபு, யுவன் கூட்டணியில் மூன்றாவது படமான கோவா-வில் ஜெய், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், வைபவ், சம்பத் ராஜ் என தனது நண்பர்கள் பட்டாளத்தை வைத்து ஹிட் கொடுத்தார். ஒரு ஊரில் இருந்து வெளியே செல்ல நினைக்கும் நண்பர்கள் கதையை சுவாரசியமாக எடுத்திருப்பார். இரண்டாவது பாதியில் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் வைத்திருந்தார் வெங்கட் பிரபு.
மங்காத்தா

வெங்கட் பிரபு அஜித் குமார் கூட்டணியில் சூப்பர் ஹிட் அடித்த படம் மங்காத்தா. அஜித் குமாரின் சினிமா வாழ்வில் ரசிகர்கள் என்றும் கொண்டாடும் படமாக மங்காத்தா இருந்து வருகிறது. ஐ.பி.எல். சூதாட்டம் மூலம் நடைபெறும் சில சம்பவங்களை சஸ்பென்ஸ்ஸாக காட்டியிருப்பார் வெங்கட் பிரபு. யுவன் இசையில் மிரட்டியிருப்பார். அஜித், திரிஷா, அர்ஜுன், லட்சுமி ராய், அஞ்சலி, வைபவ், பிரேம்ஜி, அஷ்வின், மஹத் ஆகியோர் நடித்திருந்தனர். வெங்கட் பிரபு யுவன் கூட்டணி மற்றுமொரு வெற்றிக்கூட்டணியாக அமைந்தது.
பிரியாணி

கார்த்திக், ஹன்சிகா, பிரேம்ஜி, ராம்கி, நாசர், சம்பத் ராஜ், நிதின் சத்யா ஆகியோர் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கிய படம் பிரியாணி. வெங்கட் பிரபு இயக்கிய படங்களில் சுமாரான படமாக பிரியாணி இருந்தது. யுவன் இசை படத்திற்கு அவ்வப்போது எனர்ஜி தந்தது.
மாஸ் என்கிற மாசிலாமணி
வெங்கட் பிரபுவின் மாறுபட்ட கதையில் சூர்யா, நயன்தாரா, பிரேம்ஜி, பிரனிதா, பார்த்திபன், ரியாஷ் கான், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்த படம் மாஸ் என்கிற மாசிலாமணி. பேய்யை மையமாக கொண்டு கதையை நகர்த்தியிருப்பார். திருடனாக இருந்து வரும் சூர்யா பேய்களுக்கு உதவி செய்வது போன்று காட்டியிருப்பார். அதற்க்கான காரணம் தான் படத்தின் கதை. பேக் கிரௌண்ட் மியூசிக்கில் யுவன் கலக்கியிருப்பார். வெங்கட் பிரபு யுவன் கூட்டணியில் இந்த படமும் பெரிதாக ரசிக்கும் படியாக இருக்கவில்லை.
சென்னை 600028 – 2

சென்னை 600028 படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் 2-வது பார்ட்டை வெங்கட் பிரபு எடுத்தார். ஜெய், வைபவ், பிரேம்ஜி, நிதின் சத்யா, சிவா, அரவிந்த் ஆகாஷ் என வழக்கமான கூட்டணியை வைத்து எடுத்திருந்தார். முதல் பார்ட் போலவே இதிலும் கிரிக்கெட்டை மையப்படுத்தி காமெடியாக இயக்கியிருந்தார். ஆனால் முதல் பார்ட்டை போல எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. யுவன் இசையில் ஒரு சில இடங்களில் ரசிக்கும்படி இருந்தது.
மாநாடு

வெங்கட் பிரபு யுவன் கூட்டணியில் கடந்த 3,4 படங்கள் சரியான வரவேற்பை பெறாமல் இருந்த நிலையில் சிம்புவுடன் மாநாடு படத்தில் அதை சரி செய்தனர். சிம்புவின் காம்பேக் படமான மாநாடுவில் டைம் லூப் கான்செப்ட் வைத்து வித்தியாசமாக படத்தை எடுத்திருப்பார். எஸ்.ஜே. சூர்யா, சிம்பு, கல்யாணி பிரியதர்சன ஆகியோர் நடித்திருந்தனர். இசையில் யுவன் கலக்கியிருப்பார்.
வெங்கட் பிரபு யுவன் கூட்டணியில் விஜய் நடித்து வரும் GOAT படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் விரைவில் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]