ஆழமான அரசியல் கோட்பாடுகள், சிறப்பான திரைக்கதை மற்றும் எண்ணிலடங்கா தாக்கத்தை உருவாக்கும் வசனத்திற்கு சொந்தக்காரர் இயக்குனர் Vetrimaaran. சென்ற ஆண்டு இறுதியில் வெளியான “விடுதலை பாகம் – 2” திரைப்படம் பல எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ரசிகர்களின் ஆதரவுடன் இந்த திரைப்படம் 25 நாள் கடந்துள்ளதை அந்த திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிக்கையை வெளியிட்டு தங்களின் மகிழ்ச்சியை மக்களுடன் பகிர்ந்துள்ளது.
“விடுதலை பாகம் 2 மிகவும் லாபகரமான படமாக எங்கள் நிறுவனத்திற்கு அமைந்ததில், நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் சிந்தனையைத் தூண்டும் சினிமாவாக விடுதலை 1&2 வழங்கியதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்” – RS Infotainment
மேலும் அந்த அறிக்கையில், படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்கள், ரசிகர்கள், பத்திரிக்கை, ஊடகவியலாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என அனைவருக்கும் தங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் மற்றுமொரு
— RS Infotainment (@rsinfotainment) January 13, 2025
தலைசிறந்த படைப்பை தந்த
இயக்குநர் திரு.வெற்றிமாறன் மற்றும் குழுவினருக்கு நன்றி #விடுதலைபாகம்2-ன் வெற்றிகரமான 25 நாள்
ரசிகர்கள், பத்திரிக்கை ஊடக நண்பர்கள்,விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் திரை உலக நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.… pic.twitter.com/hD3Gnhh2ap
Vetrimaaran & தனுஷ் கூட்டணி?
இந்த நற்செய்தியுடன், இயக்குனர் Vetrimaaranன் 9வது படத்தில் நடிகர் தனுஷ் உடன் மீண்டும் இணைய உள்ளார். இந்த செய்தியை அதிகாரபூர்வமாக RS Infotainment நிறுவனம் தங்களின் x தளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த இருவரின் காம்போவில் வெளியான “பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன்” போன்ற பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
Sooriன் அடுத்த திரைப்படம்!
நடிகர் soori அடுத்து நடிக்க உள்ள புது படத்தையும் RS Infotainment நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் அறிவித்துள்ளனர். 2022 ஆம் ஆண்டு வெளியான ‘Selfie’ படத்தை இயக்கிய இயக்குனர் மதிமாறன் இந்த திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
With sincere gratitude to my mentor #VetriMaaran sir, am very happy to announce my next directorial venture with beloved @sooriofficial sir produced by prestigious @rsinfotainment. heartful thanks @elredkumar sir for the trust and opportunity. thanks to entire team @mani_rsinfo
— Mathimaran Pugazhendhi (@MathiMaaran) January 13, 2025
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]