Home Cinema News ஹீரோ மாற்றமா? ‘Vaadivaasal’ பற்றிய தரமான அப்டேட்!

ஹீரோ மாற்றமா? ‘Vaadivaasal’ பற்றிய தரமான அப்டேட்!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் Vaadivaasal திரைப்படம் உருவாக போவதாக அறிவிப்பு வெளியானது. 

by Santhiya Lakshmi

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் Vaadivaasal திரைப்படம் உருவாக போவதாக அறிவிப்பு வெளியானது. 

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி அதன் பிறகு டெஸ்ட் போட்டோஷூட் நடைபெற்ற நிலையில் அது குறித்த வீடியோக்களும் வெளியாகி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், அதன் பிறகு வெற்றிமாறன் விடுதலை படத்தின் முதல் பாகம், இரண்டாம் பாகம் ஆகியவற்றில் கவனம் செலுத்த தொடங்க நடிகர் சூர்யாவும் ‘சூரரை போற்று’, ‘எதற்கும் துணிந்தவன்’ ஆகிய படங்களில் நடித்து முடித்ததோடு தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ படத்திலும் நடித்துள்ளார்.

GHl3k6DbkAADs7l

இதையெல்லாம் வைத்து சூர்யாவுக்கும் வெற்றி மாறனுக்கும் இடையே பிரச்சனை. அதனால் ‘வாடிவாசல்’ படத்தில் வேறு நடிகரை வைத்து வெற்றி மாறன் படத்தை இயக்கப் போகிறார் எனவும் தகவல் வெளியானது. 

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்க இருப்பதாகவும், ஹீரோவாக நடிகர் சூர்யா தான் நடிக்க போகிறார். கூடவே அமீர்தான் சூர்யாவின் அப்பா கேரெக்டரில் நடிக்க இருக்கிறார் என நெருங்கிய வட்டாரங்கள் மூலம் தகவல் வெளியாகியுள்ளாது.

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.