கோலிவுட்டில் அசோக் செல்வனின் ‘கூட்டத்தில் ஒருத்தன்’, சூர்யாவின் ‘ஜெய் பீம்’ ஆகிய படங்களை இயக்கியவர் த.செ.ஞானவேல். இவர் இயக்கிக் கொண்டிருக்கும் புதிய படமான ‘வேட்டையன்’-ல் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.
வாக்குரிமை என்பது என் உரிமைகளைக் காத்து, உணர்வுகளைப் புரிந்து ஆட்சி செய்கிற ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் சமூகக் கடமை. pic.twitter.com/XlJHMZOqiI
— Gnanavel (@tjgnan) April 17, 2024
இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. சுபாஸ்கரனின் ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தை இந்த ஆண்டு (2024) அக்டோபர் மாதம் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள்.
18-வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் 19-ஆம் தேதி முதல் துவங்கி ஜூன் மாதம் 1-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. இந்நிலையில், இன்று இயக்குநர் தா.செ.ஞானவேல் தனது எக்ஸ் பக்கத்தில் “வாக்குரிமை என்பது என் உரிமைகளைக் காத்து, உணர்வுகளைப் புரிந்து ஆட்சி செய்கிற ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் சமூகக் கடமை. வருங்கால தலைமுறையினருக்கு வெறுப்பு நிலவாத, சக இந்தியர்களின் தனித்துவத்தை மதிக்கிற பாதுகாப்பான சூழலை அமைத்து தருவது நமது தார்மீக கடமை.
பாண்டிச்சேரியில் Rajini… ஆவேசத்தில் Fahadh Faasil… ‘Vettaiyan’ வேட்டைக்கு ரெடியா?!
இந்தியா கூட்டணி கட்சிகளின் வாக்குறுதிகள் சமூக நல்லிணக்கத்தையும், சமூக நீதியையும் காப்பாற்றும் என்கிற நம்பிக்கை அளிக்கின்றன. மாநில உரிமை, மொழி உரிமை, கருத்து உரிமை, கல்வி உரிமை போன்ற அடிப்படை உரிமைகளை மீட்டெடுப்பதும், காத்துக் கொள்வதும் அவசியம். அதன் அடிப்படையில் தி.மு.க, காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளடக்கிய இந்தியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி நானறிந்த, என்னை அறிந்த அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]