Home Cinema News வேட்டையன் படத்தில் மலேசியா வாசுதேவன் குரலில் ‘மனசிலாயோ’ பாடல் வெளியானது! 

வேட்டையன் படத்தில் மலேசியா வாசுதேவன் குரலில் ‘மனசிலாயோ’ பாடல் வெளியானது! 

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள 'வேட்டையன் படத்தின் முதல் பாடல் 'மனசிலாயோ' பாடல் தற்போது வெளியாகியுள்ளது. 

by Vinodhini Kumar

‘வேட்டையன்’ படத்தின் எதிர்பார்ப்புக்கு இணங்க இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையில் ‘மனசிலாயோ’ பாடல் வெளியானது. ரஜினிகாந்த் நடிப்பில் விறுவிறுப்பாக உருவாக்கி வரும் படம் தான் ‘வேட்டையன். இந்த படத்தை இயக்குனர் TJ ஞானவேல் இயக்க, லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. 

வேட்டையன் releasing on October 10

மறைந்த பிரபல பாடகரும் நடிகருமான மலேசியா வாசுதேவன் , 27 வருடங்களுக்கு பின் நடிகர் ரஜினிகாந்த் உடைய படத்தில் அவரின் குரலில் பாடல் வெளியாகிறது. AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் பாடகர் மலேசியா வாசுதேவன் குரலை இப்பாடலில் பயன்படுத்தியுள்ளார்கள். 

பாண்டிச்சேரியில் Rajini… ஆவேசத்தில் Fahadh Faasil… ‘Vettaiyan’ வேட்டைக்கு ரெடியா?!

கேரளாவில் உள்ள ஒரு மாளிகையில், மஞ்சு வாரியார், RJ ரக்ஷன் உடன் நடிகர் ரஜினிகாந்த் ஆடுவதும், அனிருத்தின் துள்ளலான இசையில் இப்பாடலின் lyrical வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இப்பாடலை சூப்பர் சுப்பு மற்றும் விஷ்ணு இடவன் எழுதியுள்ளனர். 

அனிருத் ரவிச்சந்திரன், மலேசியா வாசுதேவனின் மகனும் பாடகிருமான யுகேந்திரன் மற்றும் பாடகி தீப்தி சுரேஷ் ஆகியோரும் இப்பாடலை பாடியுள்ளனர். ‘வேட்டையன்’ படத்தை பற்றிய பெரிய எதிர்பார்ப்பு கண்டிப்பாக நிறைவேறும் வகையில் இயக்குனர் TJ ஞானவேல் சமீபத்தில் ஒரு நேர்காணலில் படத்தை பற்றி நம்பிக்கையுடன் பேசினார். 

அக்டோபரில் மோதப்போகும் தமிழ் சினிமாவின் நான்கு பெரிய படங்கள்!

ரஜினிகாந்த் உடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியார், ரித்திகா சிங்க், கிஷோர், துஷாரா விஜயன் நடிப்பில் இந்த படம் அக்டோபர் 10 வெளியாகிறது. 

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.