Home Cinema News ‘வேட்டையன்’ படத்தின் ‘Hunter Vantaar’ பாடல் மற்றும் முன்னோட்டம் வெளியானது! 

‘வேட்டையன்’ படத்தின் ‘Hunter Vantaar’ பாடல் மற்றும் முன்னோட்டம் வெளியானது! 

'ஜெய் பீம்' படத்தை இயக்கிய TJ ஞானவேல், அந்த படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதையாக 'வேட்டையன்' உருவாகியுள்ளது.

by Vinodhini Kumar

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியார், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் TJ ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வேட்டையன்’. காவல் துறையில் Encounter specialist ஆக பணியாற்றும் காதாபாதிரத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். 

வேட்டையன் Hunter Vantaar song out

இந்த படத்தின் ஒரு சிறிய முன்னோட்டத்தை இரண்டாவது பாடலுடன் வெளியிட்டனர் படக்குழுவினர். நடிகர் அமிதாப் பச்சன் காவல் துறை உயர் அதிகாரியாக நடித்துள்ளார். நடிகை ரித்திகா சிங்கும் போலீஸ் அதிகாரியாக இந்த முன்னோட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்கள். 

இதில் பிரபலமான பல Encounterகளை செய்யும் நான்கு போலீஸ் அதிகாரிகளில் ரஜினிகாந்தும் ஒருவர். அவரை பற்றி காவல் அதிகாரிகள் உரையாடும் கட்சியில் தொடங்கி எப்படி ஒரு போலீஸ் SP -யாக பல ரௌடிகளை பயமுறுத்துகிறார் என்ற கோணத்தில் இந்த முன்னோட்டம் முடிகிறது. இதில் தெரியவந்த மற்றொரு தகவல் என்னவென்றால், நடிகர் அமிதாப் பச்சனுக்கு தமிழில் குரல் கொடுத்துள்ளது நடிகர் பிரகாஷ் ராஜ். 

‘வேட்டையன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில்! 

‘Hunter Vantaar’ பாடலும் இந்த முன்னோட்டத்துடன் வெளியானது. ரஜினிகாந்த்துடைய சமீபத்திய படங்களுக்கெல்லாம் இசையமைத்து வரும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், வழக்கம்போல் இந்த படத்திலும் ஒரு தரமான, வைரல் பாடலான ‘மனசிலாயோ’ பாடலை வெளியிட்டார். 

இப்போது பாடகர் சித்தார்த் பஸ்ரூர் குரலில் ‘Hunter Vantaar’ பாடலை சேர்ந்து பாடியுள்ளார். இந்த பாடலின் ஆடியோ மட்டும் தற்போது வெளியாகியுள்ளது. 2021ம் ஆண்டு ‘ஜெய் பீம்’ படத்தை இயக்கிய TJ ஞானவேல், அந்த படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதையாக ‘வேட்டையன்’ உருவாகியுள்ளது தெரிகிறது. இந்த படம் வரும் அக்டோபர் 10 வெளியாகவுள்ளது.     

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.