Home Cinema News வேட்டையன்’ படத்தில் இடம்பெறும் ரஜினியின் இன்ட்ரோ பாடலின் அசத்தலான அப்டேட்!

வேட்டையன்’ படத்தில் இடம்பெறும் ரஜினியின் இன்ட்ரோ பாடலின் அசத்தலான அப்டேட்!

by Sivaanantham RB

கோலிவுட்டின் டாப் ஹீரோவான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் கைவசம் ‘வேட்டையன்’ மற்றும் ‘தலைவர் 171‘ ஆகிய 2 படங்கள் இருக்கிறது. இதில் ‘வேட்டையன்’ படத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ போலீஸ் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

MV5BMDViN2U2MDUtNWI0NS00NzBmLTgwMmQtNDJhMWMyNjIwYjYyXkEyXkFqcGdeQXVyMTQ0NTA1NzY5. V1

இந்த படத்தை ‘ஜெய் பீம்’ புகழ் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கிக் கொண்டிருக்கிறார். இதில் முக்கிய கதாபாத்திரங்களில் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், கிஷோர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ஜி.எம்.சுந்தர், ரோகிணி, ராவ் ரமேஷ், ரமேஷ் திலக், ரக்ஷன் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள்.

அனிருத் இசையமைத்து வரும் இதற்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது, இப்படத்தின் ஷூட்டிங் சென்னை ECR-ல் ஜெட் ஸ்பீடில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஷெட்யூலில் நடிகர் ராணா டகுபதியின் காட்சிகள் படமாக்கப்படுகிறதாம். 

இந்நிலையில், இந்த படத்தில் இடம்பெறும் ரஜினியின் இன்ட்ரோ பாடலுக்கான ஷூட்டிங்கை வருகிற ஏப்ரல் 25-ஆம் தேதி முதல் ஆரம்பிக்கத் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்பாடலுக்கு தினேஷ் மாஸ்டர் தான் நடன இயக்குநராம். சுபாஸ்கரனின் ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ தயாரிக்கும் இப்படம் இந்த ஆண்டு (2024) அக்டோபர் மாதம் ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.