Home Cinema News Encounter Specialist ‘வேட்டையன்’ படத்தின் டிரெய்லர் வெளியானது! 

Encounter Specialist ‘வேட்டையன்’ படத்தின் டிரெய்லர் வெளியானது! 

T. J ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சுவர் ஸ்டார் அமிதாப் பச்சன், ராணா டகுபதி, பஹத் பாசில், மஞ்சு வாரியார், துஷாரா விஜயன், அபிராமி ஆகியோர் நடித்துள்ள படம் 'வேட்டையன்'.  

by Vinodhini Kumar

2024ன் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘வேட்டையன்’ படமும் ஒன்று. ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணைந்து நடிப்பதால், இவர்களுடன் பல முன்னணி நடிகர்கள் சேர்ந்து உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள் அதிகரித்ததால், காவல் துறை மற்றும் சட்ட ஒழுங்கு மேல் வீசப்படும் கேள்விகளுக்கு தீர்வாக இந்த தவறு செய்பவர்களுக்கு வலுவான தண்டனையான ‘Encounter’ செய்ய முடிவெடுக்கப்படுகிறது. இதில் கைதேர்ந்தவராக ஒரு ‘Encounter Specialist’ ஆக வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 

Amitabh Bachchan in வேட்டையன்

சூப்பர்ஸ்டாருக்கு திடீரென நடக்கும் அதிநவீன சர்ஜரி… காரணம் என்ன?

காவல் துறையில் இவருக்கு இருக்கும் மரியாதையும், சமூக சீர்கேட்டை தடுக்க இப்படியான தண்டனைகளை வழங்க கூடாது என்ற நெறியுடன் இயங்கும் நீதிபதியாக ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடித்துள்ளார். ‘Justice Delayed is Justice Denied’ அதாவது தாமதமாக வழங்கப்படும் நிதி நிராகரிப்பட்டது, அதேபோல் ‘Justice Hurried is Justice Buried’ போன்ற வசனங்களுடன் நடிகர் அமிதாப் பச்சன் ஒரு கண்ணியமான கதாபத்திரத்தில் நடித்துள்ளார். 

Rana Daggubati

இவர்களுடன் நடிகர் ராணா டகுபதி, ஒரு திறமையான பணக்கார தொழிலதிபராக தெரிகிறார். ‘வேட்டையன்’ படத்தின் முக்கியமான வில்லனாக இந்த டிரெய்லரில் காட்டப்பட்டிருந்தாலும், இதே படத்தில் மலையாள நடிகர் பஹத் பாசில் திருடனாக நடித்துள்ளார். இவரின் பாத்திரம் துறுதுறுவென இருப்பதாக தெரிந்து ஆழமான ஒன்றாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது. 

Fahadh Faasil and Dushara Vijayan

பாண்டிச்சேரியில் Rajini… ஆவேசத்தில் Fahadh Faasil… ‘Vettaiyan’ வேட்டைக்கு ரெடியா?!

இவர்களுடன் துஷாரா விஜயன் ஒரு இயல்பான பாத்திரத்திலும், மஞ்சு வாரியார் நடிகர் ரஜினிகாந்த் உடைய மனைவியாகவும் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார், இவரின் இசையில் ‘கபாலி’ படத்தின் பாணியில் தலைவர் ரஜினிகாந்த் entry கொடுப்பது, ‘வேட்டையன்‘ பட டிரைலரில் அதிரடியாக அமைந்துள்ளது.   

Rajinikanth in Vettaiyan

Lyca நிறுவனம் தயாரிப்பில், அன்பறிவு சகோதரர்களின் ஆக்ஷன் பயிற்சியில், பிலோமின் ராஜ் அவர்களின் தொகுப்பில் ‘வேட்டையன்’ படம் வரும் அக்டோபர் 10ம் தேதி உலகளவில் வெளியாகிறது குறிப்பிடத்தக்கது. 

Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

©2025 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.