Home Cinema News சூப்பர் ஸ்டார் Rajinikanthன் ‘வேட்டையன்’ OTT ரைட்ஸை வாங்கிய நிறுவனம்! 

சூப்பர் ஸ்டார் Rajinikanthன் ‘வேட்டையன்’ OTT ரைட்ஸை வாங்கிய நிறுவனம்! 

T.J ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தின் OTT உரிமைக்கு பெரிய போட்டி நிலவிய நிலையில், பல கோடிகள் கொடுத்து உரிமையை கைப்பற்றியது முன்னணி நிறுவனம். 

by Vinodhini Kumar

சூப்பர் ஸ்டார் Rajinikanth நடிக்கும் 170வது படம் ‘வேட்டையன்’. முழுமையான ஆக்ஷன் படமாக உருவாகும் இந்த படத்தை T.J. ஞானவேல் இயக்குகிறார். லைகா புரொடக்சன் தயாரிக்கும் படத்தில் பிரபல நடிகர்கள் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, ரோகிணி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் நடித்துள்ளனர். 

வேட்டையன் Super Star Rajinikanth

‘Vettaiyan’ என்று படத்தின் பெயரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளான டிசம்பர் 12, 2023ல் முடிவெடுத்தனர். இந்தியா முழுவதும் சென்னை, மும்பை, ஹைதராபாத், திருவனந்தபுரம் என பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. 160 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் இந்த படத்தில் ரஜினிகாந்த் ஒரு காவல் அதிகாரியாக நடித்துள்ளார். ஹிந்தியில் கடைசியாக 1991ல் இணைந்த அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த், இந்த படத்தில் இணைந்துள்ளார்கள். 

Amitabh Bachchan and Rajinikanth

‘வேட்டையன்’ படத்தின் OTT உரிமைக்கு பலத்த போட்டி இருந்த நிலையில் அமேசான் பிரைம் (Amazon Prime) நிறுவனம் கோடி கணக்கில் இந்த உரிமையை வாங்கியுள்ளது. இப்படத்தின் டப்பிங் கொடுக்க ஆரம்பித்துள்ளார் கதாநாயகன் ரஜினிகாந்த் என்பதும் கடைசியாக கிடைத்த தகவல். 

ஃபகத் ஃபாசில் வில்லனாக நடிக்க உள்ளார், ராணா டகுபதி முக்கிய பாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘பேட்ட’, ‘தர்பார்’, ‘ஜெய்லர்’ படங்களுக்கு ஹிட் பாடல்கள் அமைத்த அனிருத் ரவிச்சந்திரன் இப்படத்துக்கு இசையமைப்பாளர். இந்தியன் 2 படத்திற்கு ஏற்பாடு செய்த பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவை போல ‘வேட்டையன்’ படத்துக்கும் லைகா நிறுவனம் ஏற்பாடு செய்யும் என்றும், சென்னையில் நடக்கவிருப்பதாக தெரிகிறது. 

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.