தமிழ் திரையுலகை பல ஆண்டுகளாக தன்னுடைய நிகரில்லா ஸ்டைலாலும், அசத்தலான நடிப்பாலும் தன வசம் ஈர்த்து, இன்றும் ஒரே சூப்பர் ஸ்டாராக கோலாச்சி வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் சமீபத்தில் புது இயக்குனர்களுடன் பணியாற்றி வருகிறார். அப்படி TJ ஞானவேல் இயக்கத்தில் அவர் நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் பாடல் ஒன்று வெளியாகியுள்ளது.

‘Vettaiyan Padai’ என்ற இந்த பாடல் தலைவர் ரஜினிகாந்த் உடைய ரசிகர்களுக்காகவே பிரத்யேகமாக வெளியிடப்பட்டுள்ளது. A Fan Tribute to Superstar Rajinikanth என உருவாகியுள்ள இந்த பாடலை புது இசையமைப்பாளர் அகிலேஷ் RK இசையில் உருவாகியுள்ளது. இளம் எழுத்தாளர் ஆனந்த் K உடைய அதிரடியான பாடல்வரிகளில், அசத்தலாக உருவாகியுள்ளது இந்த பாடல்.
‘Vettaiyan’ படத்தின் இரண்டாவது பாடல் தயார்! அதிரவைக்க வருகிறார் அனிருத்!
வேட்டையன் படத்துக்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்தாலும், இந்த ஒரு Tribute பாடலை இளம் இசைக்குழுவினர் ஒன்று சேர்ந்து உருவாக்கியுள்ளனர். இந்த பாடலை அகிலேஷ் RK மற்றும் அக்ஷய் RK ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.
இந்த பாடலின் Lyrical Video தற்போது வெளியாகியுள்ளது. ‘வேட்டையன்’ படம் தலைவர் ரஜினிகாந்தின் 170 வது படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியார், ராணா டகுபதி, பஹத் பாஸில், துஷாரா விஜயன், ரித்திகா சிங், அபிராமி ஆகியோர் நடித்துள்ளனர். இதனாலேயே இப்படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
‘வேட்டையன்‘ படத்தில் ஏற்கனவே வெளியான ‘மனசிலாயோ’ பாடலும் ‘Hunter Vantaar’ பாடலும் இளைஞர்கள் மத்தியில் வைரலாகியது. இதை தொடர்ந்து இப்போது வெளியாகியுள்ள ‘Vettaiyan Padai’ பாடலும் ட்ரெண்டாக ஆரம்பித்துள்ளது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]