TJ ஞானவேல் இயக்கத்தில் இரண்டு திரை துரையின் சூப்பர் ஸ்டார்கள் ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் இணைந்து நடிக்கும் படம் ‘Vettaiyan’. அக்டோபர் 10ம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் அதிரடி இசையுடன் ரசிகர்களை கொண்டாட்டத்தில் வைத்துள்ளார்.
#HunterVantaar , next song from #Vettaiyan from day after 🔥🔥🔥
— Anirudh Ravichander (@anirudhofficial) September 18, 2024
Superstar @rajinikanth 🫡🫡🫡@tjgnan @LycaProductions @SonyMusicSouth
🎤 @siddharthbasrur 🤗
🖋️ @Arivubeing 🤗 pic.twitter.com/13QxZ9sVth
‘Vettaiyan’ படத்தின் இரண்டாவது பாடல் ‘Hunter Vantaar’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பாடலை சித்தார்த் பஸ்ரூர் என்ற பாடகர் பாடியுள்ளார். இந்த பாடலை உருவாக்கிய விடியோவை இனையத்தில் பதிவிட்டு அமர்க்களமான ஒரு அப்டேட் கொடுத்துள்ளார்.
‘Hunter Vantaar’ என்ற பாடலை பிரபல பாடகரும் பாடலாசிரியருமான அறிவு எழுதியுள்ளார். மேலும் இந்த பாடல் செப்டம்பர் 20ம் தேதி வெளியாகும் என தெரிவித்துள்ளனர். ஏற்கனவே ‘வேட்டையன்’ படத்தின் முதல் பாடல் வெளியாக இன்றும் வைரலாக கேட்கபட்டு வருகிறது.
வேட்டையன் படத்தில் மலேசியா வாசுதேவன் குரலில் ‘மனசிலாயோ’ பாடல் வெளியானது!
‘மனசிலாயோ’ பாடலின் மாபெரும் ஹிட்டுக்கு பிறகு ‘Hunter Vantaar’ பாடலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஒரு மாஸான பாடலாக அமையும் என்று தெரிகிறது. ‘வேட்டையன்’ படத்தில் இதுவரை பார்க்காத ரஜினிகாந்தை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் என இயக்குனர் TJ ஞானவேல் சமீபத்தில் கூறினார்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]