மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியாகவிருக்கும் விடா முயற்சி படத்தின் Update-கள் அவ்வப்போது வெளிவந்த நிலையில் தற்போது ஆர்வ படத்துடன் ஒரு Update வெளியிட்டுள்ளது லைகா.
அஜித் குமார் வலிமை, துணிவு படத்திற்கு பிறகு தடம், கலகத்தலைவன் படத்தை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் விடா முயற்சி படத்தில் கமிட் ஆகியிருந்தார். அதற்கான படப்பிடிப்பு இறுதிக்கட்ட நிலையை அடைந்தது.

கடந்த இரண்டு மாதங்களில் படத்தில் நடிக்கும் நடிகர்கள் அப்டேட் வெளியாகிவந்தது. அஜித் குமார், அர்ஜுன் கூட்டணி மங்காத்தா படத்திற்கு பிறகு இணைந்தது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

பிக் பாஸ் சீசன் 1-ல் டைட்டில் வின்னர் ஆனா ஆரவ், திரிஷா கிருஷ்ணன், ரெஜினா, அருண் விஜய் என பெரிய நடிகர் பட்டாளம் நடிக்கவுள்ளது.
லைகா ப்ரொடக்சன் சுபாஷ்கரன் தயாரிப்பில், ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், அனிருத் இசையில் அக்டோபர் மாதம் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விடா முயற்சியின் கதை பெரும்பாலும் வெளிநாட்டில் நடக்கிற கதை. இதனால் படத்தின் பெரும்பகுதி ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடந்து வந்தது.
கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த ஷூட்டிங்கின் போது அஜித்குமார் மற்றும் ஆரவ் காரில் சேசிங் செய்வது போன்ற காட்சி எடுக்கப்பட்டது. அதில் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டது. அதிஷ்டவசமாக இருவருக்கும் ஏதும் ஏற்படவில்லை.

அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது வலைதள பக்கத்தில் விபத்து ஏற்பட்ட வீடியோவை வெளியிட்டிருந்தார். ரசிகர்களுக்காக இந்த அளவு ரிஸ்க் எடுத்து நடித்துவரும் அஜித்குமார் அவரின் செயலை கண்டு ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.
தற்போது லைகா நிறுவனம் ஆரவ் ஜீப்-ன் கதவை திறந்து வெளியே பார்த்தபடி அமர்ந்திருப்பது போல ஒரு போஸ்டர் வெளியிட்டிருந்தது. பேக் கிரௌண்டில் அஜித்குமாரின் புகைப்படம் இருப்பது போன்று இருந்தது.
Presenting the look of actor @Aravoffl 🌟 from VIDAAMUYARCHI. 💥 Embracing the spirit of persistence! 💪#VidaaMuyarchi #EffortsNeverFail#AjithKumar #MagizhThirumeni @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran @trishtrashers @akarjunofficial @anirudhofficial @Aravoffl… pic.twitter.com/rGfwbWWsa7
— Lyca Productions (@LycaProductions) August 9, 2024
கடந்த சில நாட்களாக அர்ஜுன் புகைப்படம், திரிஷா புகைப்படம் கொண்ட போஸ்டர் லைகா நிறுவனம் வெளியிட்டிருந்தது. மேலும் அஜித்குமார் சினிமா வாழ்விற்கு வந்து 32 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விதமாகவும் போஸ்டர் வெளியிட்டிருந்தது.

Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]