2025ல் அதிகம் எதிர்பார்க்கும் படங்களில் ஒன்றான ‘விடாமுயற்சி’ படத்தின் அறிவிப்புகள் வெளியாக தொடங்கியுள்ள நிலையில், அஜித் குமார் மற்றும் திரிஷா கிருஷ்ணன் நடிப்பில் இவர்களுக்கான காதல் பாடல் ‘Sawadeeka’ நாளை வெளியாகும் என அரிசிப்பு வெளியாகியுள்ளது. இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசரை தொடர்ந்து இப்போது முதல் பாடல் வெளியாகும் என்ற அறிவிப்பு ரசிகர்களை மகிழ்ச்சிப் படுத்தியுள்ளது.
#Sawadeeka from 1pm day after 🕺💃
— Anirudh Ravichander (@anirudhofficial) December 25, 2024
Dearest AK sir 🤗 #MagizhThirumeni #Vidaamuyarchi #EffortsNeverFail@LycaProductions #Subaskaran @gkmtamilkumaran @trishtrashers @akarjunofficial @Aravoffl @ReginaCassandra @omdop @srikanth_nb @SureshChandraa @AbdulNassarOffl @DoneChannel1… pic.twitter.com/2M0MTd4yfA
வரும் ஆண்டின் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ள ‘விடாமுயற்சி’ படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, ‘Sawadeeka’ பாடலை பாடலாசிரியரும் பாடகருமான அறிவு எழுதியுள்ளார். இப்பாடலை பாடகர் அந்தோணி தாசன் பாடியுள்ளார் என்றும் இசையமைப்பாளர் அனிருத் தன்னுடைய X தலத்தில் பதிவிட்டுள்ளார். இந்த அறிவிப்பில் பாடகர் அந்தோணி தாசனை Folk Marley என்றும் குறிப்பிட்டவர் இப்பாடலின் இரண்டு வரிகளை சேர்த்து பதிவிட்டுள்ளார்.
ஒரே நேரத்தில் ‘விடாமுயற்சி’ மற்றும் ‘Good Bad Ugly’ படங்களில் நடித்துவருகிறார் அஜித் குமார்!
#Sawadeeka sawadeeka.. trip-ah tripping ka.. trip-ah tripping ka..
— Anirudh Ravichander (@anirudhofficial) December 26, 2024
Sawadeeka sawadeeka.. yakka kapunkaa.. yakka kapunkaa 🕺💃#Vidaamuyarchi single from 1pm tomo 🎉🎉🎉
AK sir ⚡️⚡️⚡️ #MagizhThirumeni 🤗🤗🤗
🎤 ‘Folk Marley’ @anthonydaasan
🖋️ @Arivubeing
இந்த ‘Sawadeeka’ என்ற பாடல் டிசம்பர் 27ம் தேதி மதியம் 1 மணிக்கு வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ள நிலையில் நடிகர் அஜித் மற்றும் நடிகை திரிஷாவின் காதல் பாடல்கள் அனைத்தும் இதுவரை நல்ல வரவேற்பு பெற்றுள்ளதையும், கடைசியாக 2015ம் ஆண்டு வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்திலும் இருவரின் காதல் கதைக்கு வரவேற்பு இருந்தது. 2025ல் விடாமுயற்சி மட்டுமின்றி அஜித் நடிப்பில் அடுத்ததாக உருவாகும் Good Bad Ugly படத்திலும் திரிஷா தான் கதாநாயகி என்பது குறிப்பிடத்தக்கது.