விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், கென் கருணாஸ் ஆகியோர் நடிக்கும் ‘விடுதலை 2’ படம் டிசம்பர் 20ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இன்று இந்த படத்துக்கு ‘A’ certificate வழங்கப்பட்டுள்ளது. இயக்குனர் வெற்றிமாறனின் எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ள விடுதலை 2ம் பாகம் படத்தின் இறுதியான நேரக்கணக்கும் வெளியாகியுள்ளது. சென்சார் போர்டு வெளியிட்டுள்ள மாற்றங்களில் இந்த படத்தின் நேரம் 2 மணி 57 நிமிடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
#ViduthalaiPart2 Censored 'A' 🔞
— Sreedhar Pillai (@sri50) December 17, 2024
Runtime – 2hrs 52Mins👀
Release – Dec 20 pic.twitter.com/oeflUn2plJ
Source: Sreedhar Pillai (X)
முதல் பாகத்தின் அபார வெற்றியைத் தொடர்ந்து, விடுதலை 2ம் பாகத்திற்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. நவம்பர் 27ம் தேதி வெளியான ட்ரைலரில் அரசியல், காதல், போராட்டக் குரல் என தீவிரமான கதைக்களத்துடன் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு இரண்டாம் பாகம் வெளியாகவிருப்பது தெரிகிறது. இசைஞானி இளையராஜாவின் இசையில் ஏற்கனவே வெளியான ‘தினம் தினம்’ மற்றும் ‘மனசுல’ ஆகிய பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க, இப்படத்தின் மதிப்பு மேலும் அதிகரித்துள்ளது.
‘Viduthalai 2’ படத்தை மீண்டும் ரீ ஷூட் செய்கிறாரா வெற்றிமாறன்!!
இன்று வெளியான சென்சார் போர்டு பதிவில் அரசியல் ரீதியான சில சொற்களும் வசனங்களும் நீக்கப்படவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், விடுதலை 2ம் பாகம் படம் வெளியாக இன்னும் மூன்று நாட்களே இருப்பது குறிப்பிடத்தக்கது. முதல் பாகத்தின் கதையை தொடர்வது மட்டுமில்லாமல் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தின் எழுச்சி மற்றும் போராட்ட குணத்தின் பின்னணியை இரண்டாம் பாகம் பிரதிபலிக்கும் எனத் தெரிகிறது. படக்குழுவினர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், நேரலைகள் என படத்தை தீவிரமாக விளம்பரப்படுத்தி வரும் நிலையில் வெளியாகியப் பின்னர் Zee 5 OTT தளத்தில் இப்படம் ஒளிபரப்பாகும்.