Home Cinema News விடுதலை பாகம் 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

விடுதலை பாகம் 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை பாகம் 2ன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

by Vinodhini Kumar

வெற்றிமாறன் இயக்கிய விடுதலை பாகம் 1 மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடியது. நடிகர் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ நடித்திருந்தனர். இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக உள்ளது. 

Viduthalai பாகம் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதியை மையமாக வைத்து உருவாகும் படத்தில் மஞ்சு வாரியர் மற்றும் இயக்குனர் அனுராக் கஷ்யப் புது சேர்க்கையாக இணைந்துள்ளனர். 

விடுதலை 2 first look poster

விஜய் சேதுபதி மற்றும் மஞ்சு வாரியர் சேர்ந்திருக்கும் போஸ்டரும் வெளியாகியுள்ளது. அதில் வீரமும் காதலும் என்ற வரியும் திருக்குறள் வரிகளும் சேர்த்து வெளியாகியுள்ளது. பகைத்திறந்தெரிதல் என்ற அதிகாரத்தில் உள்ள குறள் சேர்க்கப்பட்டுள்ளது. பகைவரின் செருக்கை உடைக்காமல் வாழ்வது அர்த்தமற்றது என்பது தான் அந்த குறளின் அர்த்தம். 

இது விடுதலை பாகம் 2ல் விஜய் சேதுபதியின் கதாப்பாத்திரம் பற்றிய முன் குறிப்பாக இருக்கிறது. இந்த படத்தின் வேலைகள் விரைவில் முடிந்து படம் வெளியாகும். 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.