Home Cinema News விடுதலை பாகம் 2ல் விஜய் சேதுபதி-மஞ்சு வாரியர் காட்சிகள்! 

விடுதலை பாகம் 2ல் விஜய் சேதுபதி-மஞ்சு வாரியர் காட்சிகள்! 

வெற்றிமாறன் இயக்கத்தில் 2024ல் வெளியாகும் விடுதலை பாகம் 2. இதில் விஜய் சேதுபதி - மஞ்சு வாரியர் ஜோடியாக நடித்த காட்சிகள் இடம்பெற்றுளதாக தகவல். 

by Vinodhini Kumar
Vetrimaaran and Vijay Sethupathi

விடுதலை பாகம் 1 வெளியாகி அதிரடியான வெற்றியை கொடுத்து, பாகம் 2ற்கான ஆவலையும் தூண்டியது. நடிகர் சூரியை யாரும் கற்பனை செய்யாத தோற்றத்தில் இயக்கிய வெற்றிமாறன், தற்போது விடுதலை பாகம் 2ல் கூட புதிதாக ஒன்றை செய்துள்ளார். 

விடுதலை 2 Vijay Sethupathi

எப்படி நகைச்சுவை நடிகரான சூரியை முழுமையாக மாற்றி ஆக்ஷன் மட்டுமின்றி காதல் காட்சிகளையும் இருக்கிறாரோ, அதே போல் படத்தில் விஜய் சேதுபதியின் பாத்திரத்துக்கும் ஒரு காதல் கதையை சேர்த்துள்ளார். மஞ்சு வாரியர் உடன் Viduthalai பாகம் 2ல் காதல் காட்சிகள் படமாக்கப்பட்டு, அவை படத்தில் நிச்சயம் சேர்க்கப்படும் என்றும் கூறியுள்ளார் இயக்குனர் வெற்றிமாறன். 

Manju Warrier

நடிகர் விஜய் சேதுபதிக்கு இந்த காதல் காட்சிகளில் நல்ல நம்பிக்கை இருந்ததாகவும், இயக்குனர் வெற்றிமாறனுக்கும் பிடித்து, கண்டிப்பாக படத்தில் சேர்ப்பதாக முடிவில் உள்ளாராம். 2024ல் தன்னுடைய 50வது படமான ‘மகாராஜா’ படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்ததை அடுத்து, Viduthalai பாகம் 2ம் அதன்வழி அமையும் என எதிர்பார்க்கலாம். 

Viduthalai பாகம் 2ன் ரிலீஸ் தேதி இன்னும் முடிவாகவில்லை. முதல் பாகத்தில் மஞ்சு வாரியர் இல்லை, அவரின் கதாப்பாத்திரம் கதைக்கு முக்கியமான ஒன்று என்றும் பல புதிய நடிகர்கள் இரண்டாம் பாகத்தில் இணைய உள்ளதாகவும் தகவல். 

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.