1985-ல் செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி சென்னையில் பிறந்த விக்னேஷ் சிவன், சூப்பர் ஸ்டார் ரஜினி மீது கொண்ட தீராத அன்பால் தானும் திரை துறையில் ஒரு மிகப்பெரிய ஆளாக வேண்டும் என்ற எண்ணத்தை சிறு வயது முதலே தனக்குள் விதைத்துக் கொண்டு அதற்கான உரமாக தனது ஒவ்வொரு முயற்சியையும் மாற்றிக் கொண்டார்.
2007-2012
90ஸ் கிட்ஸ் மற்றும் 2k கிட்ஸ்-இன் குழந்தை பருவத்தில் மறக்க முடியாத horror படமான “சிவி” திரைப்படத்தில் நடிகராக விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்தார். மிகவும் சிறிய அளவு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம் என்பதால் அந்த முயற்சி அவருக்கு சோபிக்கவில்லை என்றே கூறலாம். 2007-இல் வெளியான சிவி படத்திற்குப் பிறகு, 2012-ல் அவரது இயக்கத்தில் சிம்பு மற்றும் வரலட்சுமி அவர்களின் நடிப்பில் வெளியான “போடா போடி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனர் ஆக அறிமுகமானார். முதல் படம் மிகப்பெரிய அளவில் கை கொடுக்கவில்லை என்றாலும் தனது முயற்சியின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்ததால், அடுத்தடுத்த படைப்புகளை படைப்பதற்கான வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
2013
நடிகர் மற்றும் இயக்குனர் மட்டுமல்லாமல் “போடா போடி” திரைப்படத்தில் “மாட்டிக்கிட்டேனே, உன் பார்வையிலே, மற்றும் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா” போன்ற பாடல்கள் இவரின் எழுத்துக்கள் வழியாக உயிர் பெற்றது என்று கூறலாம். இந்த முயற்சியில் ஒரு சிறப்பான கவிஞராகவும் உருவெடுத்தார். அதன் பிறகு 2013-ல் வெளியான “வணக்கம் சென்னை” என்ற திரைப்படத்தில் அனிருத் இசையில் உருவான ‘எங்கடி பொறந்த’ பாடலுக்கு பாடல் ஆசிரியராக பணிபுரிந்தார், அதே ஆண்டில் “விரட்டு” என்ற திரைப்படத்தில் தரண் குமார் இசையில் வந்த ‘என் லைஃபின் ஏஞ்சல்’ என்ற பாடலுக்கும் பாடலாசிரியராக வரிகளை தந்தார்.
2014
2014-ல் நடிகர் தனுஷின் நடிப்பில் வெளியான “வேலையில்லா பட்டதாரி” என்ற திரைப்படத்தின் இரண்டாம் பாதியில் பொறியாளராக சிறு வேடத்தில் வந்து cameo appearance கொடுத்திருப்பார். இதே ஆண்டில் அனிருத் இசையில் வெளியான ‘Chance-ஏ இல்ல’ என்ற ஆல்பம் பாடலுக்கு இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
LIC’க்கு பிறகு ‘லவ் டுடே’ பிரதீப் நடிக்கப்போகும் புதிய படத்தின் இயக்குநர் யார் தெரியுமா?
2015
2015 ஆம் ஆண்டு தான் விக்னேஷ் சிவனின் personal மற்றும் professional வாழ்க்கையில் பெரிய திருப்பம் அமைந்தது என்றே கூறலாம். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த “நானும் ரவுடிதான்” என்ற திரைப்படத்தை இயக்கினார் விக்னேஷ் சிவன். இந்த திரைப்படம் விக்னேஷ் சிவனுக்கு மட்டுமல்லாது விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவிற்கும் பல பாராட்டுகளையும், நல்ல விமர்சனங்களையும் பெற்றுத் தந்தது. இந்த படத்தின் மூலம் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பரிச்சயமான உறவு, பின்னர் அதுவே திருமணத்தில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. “நானும் ரவுடி தான்” திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனுக்கு SIIMA Awards-ல் சிறந்த இயக்குனருக்கான விருது கிடைத்தது. அது தான் அவரின் முதல் விருதும் கூட. அதே ஆண்டில் வெளியான பல திரைப்படங்கள் மற்றும் ஆல்பம் பாடல்களுக்கு பாடல் ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.
படத்தின் பெயர் | பாடல் | இசையமைப்பாளர் |
என்னை அறிந்தால் | அதாரு அதாரு | ஹாரிஸ் ஜெயராஜ் |
மாரி | தப்பா தான் தெரியும் | அனிருத் ரவிச்சந்திரன் |
ஆக்கோ (Album song) | எனக்கென யாரும் இல்லையே | அனிருத் ரவிச்சந்திரன் |
நானும் ரவுடி தான் | தங்கமே, என்னை மாற்றும் காதலே, கண்ணான கண்ணே, வரவா வரவா | அனிருத் ரவிச்சந்திரன் |
2016 & 2017
2016 & 2017-ல் பாடலாசிரியராக பல சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியுள்ளார்.
படத்தின் பெயர் | பாடல் | இசையமைப்பாளர் |
அவளுக்கென (Album song) | அவளுக்கென | அனிருத் ரவிச்சந்திரன் |
ரெமோ | செஞ்சிட்டாலே, தமிழ்செல்வி. சிரிக்காதே, ரெமோ நீ காதலன் | அனிருத் ரவிச்சந்திரன் |
அச்சம் என்பது மடமையடா | சோக்காலி | ஏ ஆர் ரகுமான் |
யாக்கை | சொல்லித் தொலையேன் மா | யுவன் சங்கர் ராஜா |
ஒண்ணுமே ஆகல (Album song) | ஒண்ணுமே ஆகல | அனிருத் ரவிச்சந்திரன் |
விக்ரம் வேதா | கருப்பு வெள்ளை | சாம் CS |
சக்கப்போடு போடு ராஜா | உனக்காக | சிலம்பரசன் |
2018
2018-ல் “தானா சேர்ந்த கூட்டம்” என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்தத் திரைப்படம் ஹிந்தியில் வெளியான “Special 26” என்ற நடிகர் அக்ஷய் குமார் அவர்கள் நடித்த திரைப்படத்தின் ரீமேக் ஆகும். எதிர்பார்த்த அளவிற்கு இந்த திரைப்படம் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு கைகொடுக்கவில்லை. அதே ஆண்டு வெளியான “கோலமாவு கோகிலா” மற்றும் “இரும்புத்திரை” படங்களில் பாடலாசிரியராக பணியாற்றியுள்ளார்.
லேடி சூப்பர் ஸ்டார்’ Nayanthara-வின் மறக்கமுடியாத கதாபாத்திரங்கள்
2019
2019 ஆம் ஆண்டு பாடலாசிரியராக பல திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளார்.
- LKG திரைப்படத்தில் வரும் “திமிர் காட்டாத டி”
- Jersey திரைப்படத்தில் வரும் “மறக்கவில்லையே”
- சாகோ திரைப்படத்தில் “Bad Boy” (தமிழ் version)
- இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளியான “NGK” திரைப்படத்தில் “திமிரனும்டா”
- அதன் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “நம்ம வீட்டுப் பிள்ளை” திரைப்படத்தில் வரும் ‘எங்க அண்ணன்’ போன்ற பாடல்களுக்கு வரிகள் எழுதியுள்ளார்.
2020
2020-ல் Netflix தயாரிப்பில் உருவான anthology drama திரைப்படத்தில் இயக்குனர் சுதா கொங்காரா, கௌதம் வாசுதேவ் மேனன், வெற்றிமாறன், மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் இயக்கியுள்ளனர். நான்கு வெவ்வேறு கதைகளை கொண்ட இந்த திரைப்படத்தில் “லவ் பண்ணா உற்றனும்” என்ற திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார். இதற்கு அனிருத் ரவிச்சந்திரன் பின்னணி இசையமைத்துள்ளார். இதைத்தவிர
- “கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்” திரைப்படத்தில் ‘என்னை விட்டு’
- “தாராள பிரபு” திரைப்படத்தில் ‘உன்னாலே பெண்ணே’, ‘தாராள பிரபு’ பாடல்களுக்கு பாடலாசிரியராக வரிகள் எழுதியுள்ளார்.
2021
2021-ல் லோகேஷ் கனகராஜ் மற்றும் தளபதி விஜய் அவர்களின் கூட்டணியில் வெளியான “மாஸ்டர்” திரைப்படத்தில் ‘அந்த கண்ண பார்த்தாக்கா’ மற்றும் ‘குவிட் பண்ணுடா’ பாடல்களுக்கு வரிகள் எழுதியுள்ளார். Pan India album song ஆன “Top Tucker” பாடலுக்கு யுவன் சங்கர் ராஜா இசையில் பாலிவுட்டில் பிரபலமான இசையமைப்பாளர் மற்றும் பாடகரான பாட்ஷாவோடு இணைந்து பாடல் எழுதியுள்ளார்.
Coolie’ படப்பிடிப்பு காட்சிகள் Leak! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பதற்றம்!
அதே ஆண்டு தயாரிப்பாளராக புது அவதாரம் எடுத்து “Rowdy Pictures” என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, நடிகை நயன்தாரா நடித்த “நெற்றிக்கண்” மற்றும் இயக்குனர் வினோத்தின் “கூழாங்கல்”, நடிகர் வசந்த் ரவி நடித்த “Rocky” போன்ற திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டார்.
2022
2022-ல் மறுபடியும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இணைந்து “காத்து வாக்குல ரெண்டு காதல்” என்ற திரைப்படத்தை தயாரித்து, இயக்கி வெளியிட்டார். இந்தத் திரைப்படத்திற்கு கதாநாயகிகளாக நடிகை நயன்தாரா மற்றும் சமந்தா இணைந்து நடித்தனர். இந்தத் திரைப்படத்தில் வந்த எல்லா பாடல்களுக்கு விக்னேஷ் சிவனே பாடலாசிரியராக இருந்து வரிகளை எழுதினார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்தார். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
அதன் பிறகு Lady Superstar நயன்தாரா நடிப்பில் வெளியான “Connect” திரைப்படத்தின் தயாரிப்பாளராகவும் இருந்தார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “Don” திரைப்படத்தில் வந்த ‘Bae’, சூர்யா நடிப்பில் வெளியான “எதற்கும் துணிந்தவன்” திரைப்படத்திலிருந்து ‘வாடா தம்பி’ போன்ற பாடல்களுக்கு பாடலாசிரியராக வரிகள் எழுதியுள்ளார்.
2023
2023-ல் வெளியான குஜராத்தி மொழியில் உருவாகி வெளியிடப்பட்ட “Shubh Yatra” என்ற திரைப்படத்தை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து தயாரித்து வெளியிட்டுள்ளனர். அந்த ஆண்டின் மிகப்பெரிய Blockbuster Box Office Hit படமான “ஜெய்லர்” திரைப்படத்தில் வந்த “ரத்தமாரே” பாடலின் பாடலாசிரியர் ஆக அங்கம் வகித்துள்ளார்.
2024
“இங்க நான் தான் கிங்” என்ற நடிகர் சந்தானத்தின் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘குலுக்கு குலுக்கு’ என்ற பாடலுக்கு பாடலாசிரியராக விக்னேஷ் சிவன் வரிகளை எழுதி உள்ளார்.
தற்போது அவரே எழுதி இயக்கும் “Love Insurance Kompany” திரைப்படத்தின் ஷூட்டிங் மிகவும் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தின் கதாநாயகனாக, இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை நடிகை நயன்தாரா, S.S. லலித் குமார், L.K. விஷ்ணுகுமார் ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பது அனிருத் ரவிச்சந்திரன் ஆகும்.
S.J. சூர்யா |
கிருத்தி செட்டி |
யோகி பாபு |
மிஷ்கின் |
சீமான் |
ஆனந்தராஜ் |
ரெடின் கிங்ஸ்லி |
மாளவிகா |
சுனில் ரெட்டி |
முனீஸ் காந்த் |
கௌரி கிஷன் |
மணிமேகலை |
ராதாரவி |
வையாபுரி |
முகமது ரசூல் |
இவர்கள்தான் இந்த படத்தில் உறுதி செய்யப்பட்ட மற்ற நடிகர்கள் ஆவர். இந்த படத்தின் வெளியீடு 2025-ல் எதிர்பார்க்கப்படுகிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]