இந்தியாவின் டாப் பணக்கார நடிகர், நடிகைகள் மற்றும் பிரபலங்கள் 2024ல் எவ்வளவு வரி செலுத்தியுள்ளனர் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது Fortune இந்தியா இதழ். இந்த பட்டியலில் நடிகர் விஜய் அதிக வரி செலுத்துவதில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

முதல் இடத்தில பாலிவுட் நடிகர் ஷாருக் கான் அதிக வரி செலுத்தும் நடிகராக உள்ளார். இவர் 2024ல் 92 கோடி ரூபாய் வரி செலுத்தியுள்ளார். இவருடன் டாப் 5ல் நடிகர்கள் சல்மான் கான், அமிதாப் பச்சன், மற்றும் கிரிக்கெட் வீரர் விராட் கோலி உள்ளனர். இரண்டாவது இடத்தில நடிகர் விஜய் இடம் பிடித்துள்ளார்.
இந்த பட்டியலில் 3 தென்னிந்திய நடிகர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். நடிகர் விஜய், மோகன் லால், அல்லு அர்ஜுன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் 6 கிரிக்கெட் வீரர்கள் டாப் 10 இடத்தில உள்ளனர். நடிகைகளில் ஹிந்தி நடிகை கரீனா கபூர் அதிக வரி செலுத்தியுள்ளார். தென்னிந்திய நடிகைகள் யாரும் இந்த பட்டியலில் இடம்பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2024 டாப் வரி செலுத்தும் இந்திய பிரபலங்கள் பட்டியல்
- ஷாருக் கான் – 92 கோடி
- விஜய் – 80 கோடி
- சல்மான் கான் – 75 கோடி
- அமிதாப் பச்சன் -71 கோடி
- விராட் கோலி -66 கோடி
- அஜய் தேவ்கன் -42 கோடி
- எம் எஸ் தோனி -38 கோடி
- ரன்பிர் கபூர் -36 கோடி
- சச்சின் டெண்டுல்கர் -28 கோடி
- ஹ்ரித்திக் ரோஷன் -28 கோடி
- கபில் சர்மா -26 கோடி
- சௌரவ் கங்குலி -23 கோடி
- கரீனா கபூர் -20 கோடி
- ஷாஹித் கபூர் -14 கோடி
- மோகன்லால் -14 கோடி
- அல்லு அர்ஜுன் -14 கோடி
- ஹர்திக் பாண்டியா -13 கோடி
- கியாரா அத்வானி -12 கோடி
- கத்ரீனா கைப் -11 கோடி
- பங்கஜ் திரிபாதி -11 கோடி
- அமீர் கான் -10 கோடி
- ரிஷப் பந்த் -10 கோடி
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]