ஒரு சில ஹீரோ ஹீரோயின் சேர்ந்து நடிக்கும் போது அவர்களுக்குள்ளான கெமிஸ்ட்ரி அற்புதமாக, ரசிக்கும் படியாக இருக்கும். அப்படி ரசிக்கும் வகையில் Vijay மற்றும் Trisha ஜோடியாக நடித்த படங்கள்.
நடிகர்கள் வயதானாலும் பெரும்பாலும் ஹீரோவாகவே நடித்து வரும் நிலையில் அவர்களுக்கு இணையாக கிட்டத்தட்ட 22 வருடங்களுக்கு மேல் ஹீரோயின் ஆக தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என முன்னணி நடிகையாக இருந்து வருபவர் Trisha Krishnan.

மௌனம் பேசியதே படம் முதல் தற்போது லியோ வரை முன்னணி நடிகர்களுடன் பல்வேறு முக்கிய கேரக்டர்களில் நடித்து வந்துள்ளார். அப்படி நடித்து வந்த திரிஷா விஜய் உடன் சேர்ந்து நடித்த படங்கள் மாஸ் ஹிட் ஆகியுள்ளன.
கில்லி(2004):

முதன் முதலாக 2004-ல் கில்லி படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா தனலட்சுமி கேரக்டரில் நடித்திருப்பார். சுட்டித்தனம் செய்யும் அண்ணன்களின் செல்ல பிள்ளையாக நடித்திருந்தார். இயக்குனர் தரணி இயக்கத்தில் வித்யாசாகர் இசையில் வெளிவந்தது. படத்தில் Vijay மற்றும் த்ரிஷா இருவருக்கும் எந்த வித சம்மந்தமும் இருக்காது. பிரகாஷ்ராஜ் மூலம் இருவரும் சந்தித்து த்ரிஷாவை காப்பாற்றுவார் விஜய். படம் அன்று முதல் கொண்டாடப்படும் எவெர்க்ரீன் படமாக இருந்து வருகிறது. தற்போது கில்லி படம் ரீ ரிலீஸ் செய்து வசூலை குவித்தது.
திருப்பாச்சி(2005):

2005-ல் பொங்கல் சமயம் ரிலீஸ் ஆகி பெரும் வரவேற்பை பெற்றது. Vijay, த்ரிஷா கூட்டணியில் மற்றுமொரு வெற்றிப்படமாக அமைந்தது. கிராமத்தில் இருக்கும் தங்கையை நகரத்து மாப்பிளைக்கு காட்டிக்கொடுக்கும் அண்ணன். தங்கைக்கு பிரச்சனை என்று வரும் போது பிரச்சனைக்கு காரணமானவர்களை பழிவாங்கும் கதை. நகரத்திற்கு வரும் போது த்ரிஷா மீது ஏற்படும் காதல், சென்னையில் ரவுடிகளை யார் என்று தெரியாமல் பழிவாங்கி செல்லுதல் என படத்தை விறுவிறுப்பாகவே கொண்டு சென்றிருப்பார் பேரரசு.
ஆதி(2006):

ரமணா இயக்கத்தில் 2006-ல் வெளிவந்த படம் ஆதி. Vijay, த்ரிஷா கூட்டணியில் 3-வது முறை வெளிவந்த படம். ஒரே குடும்பத்தில் பிறந்தவர்கள் ஒரு சில காரணங்களால் பல ஆண்டுகள் கழித்து சந்திக்கும் சூழ்நிலை உருவாகிறது. படம் ரிலீஸ் ஆனா சமயம் ஓரளவு மட்டுமே வரவேற்பை பெற்றது.
குருவி(2008):

2008-ல் மீண்டும் தரணி, விஜய், த்ரிஷா கூட்டணியில் வெளியான படம் குருவி. கில்லி படத்திற்கு பிறகு இவர்கள் கூட்டணியில் வெளியான படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனாலெதிர்ப்பார்த்த அளவில் கொண்டாடும் படியாக அமையவில்லை. விஜய் மற்றும் விவேக் காமெடி, கார் ரேஸ் போன்றவை ரசிக்கும் படியாக இருந்தது.
லியோ(2023):

விஜய் மற்றும் த்ரிஷா குருவி படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் ஒன்றாக நடிக்கவில்லை. தற்போது 2023-ல் லோகேஷ் இயக்கத்தில் வெளியான லியோ படத்தின் மூலம் இருவரும் இணைந்து நடித்தனர். கில்லி, திருப்பாச்சி படத்தில் பார்த்ததை போலவே இவர்களது ஜோடி மிகவும் ரசிக்கும் படியாக இருந்தது. ஆண்டுகள் மாறலாம், தோற்றங்கள் மாறலாம் ஆனால் இவர்களுக்குள்ளான கெமிஸ்ட்ரி என்று மாறாது என்பதை போல லியோ படத்தில் அழகான கணவன், மனைவியாக நடித்திருப்பார்கள்.
தென்னிந்திய சினிமாவில் ஒரு சில ஹீரோ, ஹீரோயின் ஜோடிகளின் படங்கள் மட்டுமே பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும். அந்த வகையில் விஜய் மற்றும் த்ரிஷா ஜோடி முக்கியமானது. ஆன் ஸ்க்ரீன், ஆஃப் ஸ்க்ரீன் என இவர்கள் ஜோடி பெரிதும் பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் லிஃப்ட்டிற்குள் விஜய் மற்றும் த்ரிஷா இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலானது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]