Home Cinema News அடேங்கப்பா… விஜய் ஆண்டனியின் ‘ரோமியோ’ படத்தின் முதல் நாள் வசூல் இவ்ளோவா?

அடேங்கப்பா… விஜய் ஆண்டனியின் ‘ரோமியோ’ படத்தின் முதல் நாள் வசூல் இவ்ளோவா?

by Naveen Dhayalan

பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இப்போது ஹீரோவாகவும் கலக்கி வருகிறார். இவர் கைவசம் ‘ரோமியோ’, ‘ஹிட்லர்’, ‘வள்ளி மயில்’, ‘மழை பிடிக்காத மனிதன்’, ‘காக்கி’, ‘அக்னிச் சிறகுகள்’ ஆகிய படங்கள் உள்ளது.  

இதில் விஜய் ஆண்டனியே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன்’ மூலம் தயாரித்துள்ள ‘ரோமியோ’ திரைப்படம் நேற்று (ஏப்ரல் 11-ஆம் தேதி) திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு (லவ் குரு) என இரண்டு மொழிகளில் வெளியானது.

GK9RRpIbEAAULRx 2

இந்த படத்தை இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கியுள்ளார். இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மிருணாளினி ரவி டூயட் பாடி ஆடியுள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய், சுதா, ஸ்ரீஜா ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

விஜய் ஆண்டனியே எடிட்டிங் பணியை செய்துள்ள இதற்கு பரத் தனசேகர் இசையமைத்துள்ளார், ஃபரூக்.ஜே.பாட்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது, உலக அளவில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் ரூ.1 கோடி என தகவல் வெளியாகியுள்ளது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.