Home Cinema News 3 நாட்களில் விஜய் தேவரகொண்டாவின் ‘தி ஃபேமிலி ஸ்டார்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

3 நாட்களில் விஜய் தேவரகொண்டாவின் ‘தி ஃபேமிலி ஸ்டார்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

by Naveen Dhayalan


டோலிவுட்டின் டாப் ஸ்டார்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா நடித்திருக்கும் புதிய படமான ‘தி ஃபேமிலி ஸ்டார்’ கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி தெலுங்கு மொழி மட்டுமில்லாமல், தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு திரையரங்குகளில் வெளியானது.

Untitled design 48

இந்த படத்தை பிரபல இயக்குநர் பரசுராம் இயக்கியிருக்கிறார். இதில்  விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக ‘சீதா ராமம், ஹாய் நான்னா’ புகழ் மிருணாள் தாகூர் டூயட் பாடி ஆடியிருக்கிறார்.

மேலும், ஜெகபதி பாபு, திவ்யன்ஷா கௌஷிக், அபிநயா, வெண்ணிலா கிஷோர், ரவி பிரகாஷ், அச்யுத் குமார், அஜய் கோஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

தில் ராஜுவின் ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்துக்கு கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார். தற்போது, இப்படம் கடந்த 3 நாட்களில் ரூ.22.45 கோடி (உலக அளவில்) வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.