Home Cinema News விஜய் தேவரகொண்டாவின் ‘தி ஃபேமிலி ஸ்டார்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

விஜய் தேவரகொண்டாவின் ‘தி ஃபேமிலி ஸ்டார்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

by Santhiya Lakshmi


டோலிவுட்டின் டாப் ஸ்டார்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டாவின் ‘அர்ஜுன் ரெட்டி’ படம், ஆந்திரா மற்றும் தெலுங்கானா ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டு ஆடியன்ஸிடமும் அப்ளாஸ் வாங்கி மிகப் பெரிய வெற்றி பெற்றது. 

இவரின் புதிய தெலுங்கு படமான ‘தி ஃபேமிலி ஸ்டார்’ நேற்று (ஏப்ரல் 5-ஆம் தேதி) தெலுங்கு மொழி மட்டுமின்றி, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு திரையரங்குகளில் ரிலீஸானது. தற்போது, உலக அளவில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் ரூ.11.20 கோடி என்று தகவல் வெளியாகியுள்ளது.

still from the trailer for family star 28273986 16x9 0

இயக்குநர் பரசுராம் இயக்கியிருக்கும் இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக ‘சீதா ராமம்’ புகழ் மிருணாள் தாகூர் நடித்துள்ளார். இதனை தில் ராஜுவின் ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது.

இதில் மிக முக்கிய ரோல்களில் திவ்யன்ஷா கௌஷிக், ஜெகபதி பாபு, வெண்ணிலா கிஷோர், ரவி பிரகாஷ், அபிநயா, ரவி பாபு, அச்யுத் குமார், அஜய் கோஷ், பிரபாஸ் ஸ்ரீனு, விடிவி கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். கோபி சுந்தர் இசையமைத்துள்ள இதற்கு கே.யு.மோகனன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.