Home Cinema News விஜய் தேவரகொண்டா – மிருணாள் தாகூர் ஜோடியாக நடித்துள்ள ‘தி ஃபேமிலி ஸ்டார்’… வெளியானது சூப்பரான தமிழ் ட்ரெய்லர்!

விஜய் தேவரகொண்டா – மிருணாள் தாகூர் ஜோடியாக நடித்துள்ள ‘தி ஃபேமிலி ஸ்டார்’… வெளியானது சூப்பரான தமிழ் ட்ரெய்லர்!

by Santhiya Lakshmi

பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா தனது ‘அர்ஜுன் ரெட்டி‘ படம் மூலம் கோலிவுட்டிலும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். கடைசியாக இவர் சமந்தாவுடன் ஜோடி சேர்ந்து நடித்த ‘குஷி‘ திரைப்படம் கடந்த ஆண்டு (2023) வெளியானது.

தற்போது, விஜய் தேவரகொண்டா நடித்துள்ள புதிய தெலுங்கு படம் ‘தி ஃபேமிலி ஸ்டார்’. இந்த படத்தை வருகிற ஏப்ரல் 5-ஆம் தேதி தெலுங்கு மொழி மட்டுமின்றி, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று இப்படத்தின் தமிழ் வெர்ஷன் ட்ரெய்லரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த ட்ரெய்லர் கோலிவுட் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது.

இந்த படத்தை இயக்குநர் பரசுராம் இயக்கியுள்ளார். இதில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ‘சீதா ராமம்’ படம் மூலம் ஃபேமஸான மிருணாள் தாகூர் டூயட் பாடி ஆடியுள்ளார்.

இதற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார், கே.யு.மோகனன் ஒளிப்பதிவு செய்துள்ளார், மார்த்தாண்டன்.கே.வெங்கடேஷ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் தில் ராஜு தயாரித்துள்ளார். 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.