Home Cinema News த வெ க -வின் தலைவராக முதல் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்த Vijay.

த வெ க -வின் தலைவராக முதல் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்த Vijay.

தமிழ்நாட்டு மக்களின் முழுமை பெறாத அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய, தமிழ்நாட்டு மக்களுக்காக உழைக்க, குடும்ப உறவாக  எண்ணி த வெ க -வின் முதல் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்த Vijay. 

by Sudhakaran Eswaran

தமிழ்நாட்டு மக்களின் முழுமை பெறாத அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய, தமிழ்நாட்டு மக்களுக்காக உழைக்க, குடும்ப உறவாக  எண்ணி த வெ க -வின் முதல் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்த Vijay. 

தமிழ் சினிமா முதல் இந்திய சினிமா வரை புகழின் உச்சியில் இருக்கும் தளபதி vijay பிப்ரவரியில் கட்சி பெயரை அறிவித்தது முதல் தற்போது கட்சி கொடியை அறிமுகப்படுத்தியது வரை அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்தது த வெ க கட்சியின் முதல் மாநாடு எப்போது, எங்கே? என்பது தான். 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டிக்கு அருகில் உள்ள வி.சாலை என்ற இடத்தில் வரும் அக்டோபர் 27 -ஆம் தேதி மாலை 4 மணி அளவில் நடைபெறும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது மாநாட்டிற்கு பந்தல் கால், பூமி பூஜை போடும் நிகழ்வு இன்று காலை 5 மணி அளவில் பல ரசிகர்களுக்கு மத்தியில் புஸ்லி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. 

thalapathy vijay
Source: Instagram (actor vijay)

ஆண்கள், பெண்கள் என பல்வேறு மாவட்டத்தில் இருந்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதிகாலையிலேயே திருவிழா போல பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் ஒன்று கூடினர். மாநாடு நடைபெறும் இடத்தை சமன்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வரும் நிலையில், 50 அடி உயரம் 800 அடி அகலத்தில் செயின் ஜார்ஜ் கோட்டை போன்று மாநாட்டின் முன் பக்க வழி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாநாட்டில் கலந்து கொள்ள கட்சி தொண்டர்களுக்கு Vijay நடிகராக மட்டுமல்ல TVK கட்சியின் தலைவராகவும் அழைப்பு விடுத்துள்ளார். அதில் பல்வேறு நிபந்தனைகள், அறிவுரைகள், வெற்றி முழக்கங்கள் என 3 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார் விஜய். 

விஜய் வெளியிட்ட அறிக்கையில் ஒரு சில விஷயங்கள் கவனிக்க வைத்தது. முக்கியமாக அவரது பாணியில் என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே என தொடங்கியது முதல் 

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் உங்களை நானும், என்னை நீங்களும் நினைத்துக்கொண்டே இருக்கிறோம் என்றும், குடும்ப உறவு போன்றது என்றும், முழுமை பெறாத அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

மாநாடு ஏற்பாடுகள் தொடங்கியது முதல் இறுதியில் முடிந்து செல்வது வரை ராணுவ கட்டுப்பாடுடன் இயங்க வேண்டும் என்றும், சாதாரண அரசியல் கட்சி போன்றல்லாமல் இளைஞர்கள் மிகுந்த இளஞ்சிங்கபடை, சிங்க பெண்கள் படை, குடும்பங்கள் நிறைந்த கூட்டுப்படை என்றும் கூறியிருந்தார்.

அரசியல் என்றால் என்ன? மாநாடு என்றால் என்ன? அரசியல் களத்தில் தொடர்ச்சியாக நின்று வெற்றி பெற முடியுமா என பல கேள்விகளுக்கு நமது மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி காட்டும் போது தெரியவரும் என கூறினார்.

மக்கள் இயக்கமாக இருந்த நாம் அரசியல் களத்தில் மக்களோடு மக்களாக விவேகத்தோடு செயல்படுவது முக்கியம் என்று அறிவுரை கூறினார். விரைவில் வி. சாலை என்ற வெற்றிச்சாலையில் சந்திப்போம் என்றார்.

TVK மாநாடு நடைபெறும் சமயம் பல போலீஸ் பாதுகாப்புடன் வி. சாலை முழுவதும் ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கும். தொண்டர்கள், ரசிகர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கூடும் போது ஏற்படும் கூட்ட நெரிசலை சமளிக்கும்படியான ஏற்பாடுகள் கட்டாயம் இருக்க வேண்டும்.

மாநாடு விஜய் தலைமையில் நடைபெறும் நிலையில் கட்சியில் வேறு சில முக்கிய தலைவர்கள், கொள்கைகள், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் என பல விஷயங்கள் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

கட்சி வேலைகள் ஒரு பக்கம் நடைபெற்று வரும் நிலையில் விஜய் 69 படத்தின் அப்டேட்கள் மறுபக்கம் வந்துகொண்டே உள்ளது. படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்து வெளியாகியுள்ள நிலையில் மாநாடு நடைபெறுவது குறித்த செய்திகளும் வந்த வண்ணம் உள்ளன. 

Thalapathy 69 படத்தில் இணையும் தரமான நடிகர் பட்டாளம்!

vijay GOAT
Source: Instagram (actor vijay)

தற்போது விஜய் கையில் GOAT என்று பெயரிட்ட மோதிரம் அணிந்திருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.