சினிமாவை தொடர்ந்து அரசியலில் கால் பதித்துள்ள விஜய், கட்சியின் பெயர், கட்சி கொடி, முதல் மாநாட்டிற்கான தேதி என கடந்த 6 மாதங்களாக அரசியல் வட்டாரம் முழுவதும் இவரின் ஒவ்வொரு செயலையும் கவனித்து வருகிறது என்றே கூறலாம்.
TVK கட்சியின் முதல் மாநாட்டிற்க்கான தேதியை கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில் விஜய் ரசிகர்கள், விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் போன்றோர் உற்சாகமடைந்தனர்.
சினிமாவில் அரசியல் சார்ந்த வசனங்கள் பேசும்போதே ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில் தற்போது நேரடி அரசியலில் விஜய் ஈடுபடுவது ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தும்.
— TVK Vijay (@tvkvijayhq) October 20, 2024
TVK கட்சியின் முதல் மாநாடு விக்கிரவண்டிக்கு அருகில் வி, சாலை எனும் இடத்தில் நடைபெறுவதை உறுதி செய்த நிலையில் மாநாட்டிற்க்கான வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
மாநாட்டிற்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மாநாட்டு பொறுப்பாளர்கள், தொகுதி உறுப்பினர்கள் பட்டியல் வெளியிட்டு, முதல் மாநாட்டிற்க்கான வேலைகள் நடைபெறுவதை தீவிரமாக நடைபெறுகிறது.
கழக தோழர்கள் அனைவரையும் போலவே கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாதவர்கள், முதியவர்கள் ஆகியோர் மாநாட்டிற்கு வராமல் இருக்க வேண்டும் என்று அன்பு கட்டளையிட்டுள்ளார்.
தமிழக அரசியலை அதிர வைக்கும் Vijay…கட்சிக்கொடியை அறிமுக படுத்துகிறாரா?…
அவர்களின் நலனில் அக்கறை கொண்டு நீண்ட தூரம் பயணம் செய்து வரும்போது உடல் ரீதியாக சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதனால் அவர்கள் நலனே முக்கியம்.
ஊடகம், சமூக ஊடகம் மூலம் வீட்டிலிருந்தே நமது வெற்றி மாநாட்டை கண்டுகளியுங்கள். மேலும் மாநாட்டிற்கு வருபவர்கள் பாதுகாப்புடன், சாலை விதிமுறைகளை கடைபிடித்து வருமாறும் அறிவுரை கூறியுள்ளார்.
நாம் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவே எப்போதும் இருக்க வேண்டும். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பது ஒரு கோட்பாடாக கொண்டு மக்களின் நலனுக்காக எப்போதும் இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
விஜய்யின் TVK மாநாடு எந்த அளவிற்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை வரும் அக்டோபர் 27 -ல் நடைபெறும் மாநாட்டின் மூலம் அறியலாம். விஜய்யின் அரசியல் பிரவேசம் எந்த மாதிரியாக இருக்கும் என்பதையும் மாநாட்டில் பார்க்கலாம். மற்ற கட்சி தலைவர்கள், அரசியல் விமர்சகர்கள் என விஜய்யின் மாநாட்டை உற்று கவனித்து வருகின்றனர்.