Home Cinema News விஜய்யின் ‘GOAT’ படத்தின் மலையாள உரிமை 17 கோடிக்கு விற்பனை!

விஜய்யின் ‘GOAT’ படத்தின் மலையாள உரிமை 17 கோடிக்கு விற்பனை!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் Goat திரைப்படத்தின் கேரளா உரிமையை 17 கோடி கொடுத்து வாங்கியுள்ளார்கள்.

by Sruthi Balasubramanian

செப்டம்பர் 5 விஜய்யின் Greatest Of All Time வெளியாக உள்ள நிலையில், படத்தின் விற்பனை படுபயங்கரமாக நடந்துவருகிறது. ஏற்கெனவே Netflix OTT உரிமையை 125 கோடிக்கும், ஜி தமிழ் சேனல் சேட்டிலைட் உரிமையை 60 கோடிக்கும் வாங்கிவிட்ட நிலையில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களின் உரிமையும் பெரிய தொகைக்கு விற்றுவிட்டன.

Goat movie poster

இதற்கிடையே Financier அன்புச்செழியனின் கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவனம்தான் கேரளா உரிமையை வாங்கியிருந்தது. நடிகர் விஜய்க்கு தமிழ் நாட்டில் உள்ள ரசிகர்களுக்கு இணையாக கேரளாவிலும் தீவிரமான ரசிகர்கள் உண்டு. அவரின் படப்பிடிப்பு தளத்துக்கே லட்சக்கணக்கில் கேரளா ரசிகர்கள் ஒன்று கூடிய காட்சிகள் இணையத்தில் வைரலானது. இதையடுத்து விஜய்யின் ‘GOAT’ படத்துக்கு கேரளாவில் அதிக எதிர்பார்ப்பு இருப்பதால் கோபுரம் ஃபிலிம்ஸ், கேரளாவைச் சேர்ந்த Dream Big Films நிறுவனத்துக்கு 17 கோடி ரூபாய்க்கு படத்தை இப்போது கைமாற்றியிருக்கிறது.

2024-ஆம் ஆண்டில் இரண்டாவது பாதியில் வரவுள்ள Top Heroes படங்கள்…

கேரளாவிலேயே அதிக தொகைக்கு வாங்கப்பட்ட தமிழ்ப்படம் ‘Goat‘ தான் எனவும், விஜய் படம் எப்படியும் 40 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என்பதால் படம் பெரிய லாபமாக அமையும் என்கிற பேச்சும் இப்போதே கேட்க ஆரம்பித்திருக்கிறது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.