
நடிகர் விஜய் நடிக்கும் GOAT படம் விமரிசையாக படமாக்கப்பட்டு வருகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் படம். பெரிய நடிகர் குழு நடித்துள்ள படத்தின் ஒவ்வொரு அப்டேட்டுக்கும் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. நடிகர்கள் விஜய், பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல் அமீர், மீனாட்சி சவுத்ரி, மோகன், ஜெயராம், சினேகா, லைலா என பல முன்னணி நடிகர்களை கொண்ட பிரம்மாண்ட படமாக உருவாகிறது. நடிகை சினேகா உடன் வசீகரா படத்துக்குப் பின் இணைகிறார் விஜய். AGS என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகும் படத்தின் முந்தைய அப்டேட் OTT பற்றியதாக இருந்தது. நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் இதன் OTT உரிமையை வாங்கியுள்ளது.
Happy to announce @ZeeTamil has bagged the satellite rights for #TheGreatestOfAllTime!@actorvijay Sir #TheGreatestOfAllTime
— Aishwarya Kalpathi (@aishkalpathi) June 20, 2024
A @vp_offl Hero#KalpathiSAghoram#KalpathiSGanesh#KalpathiSSuresh#GOAT @thisisysr @actorprashanth @PDdancing @dhilipaction #Mohan #Jayaram… pic.twitter.com/CPU1yTWaOt
GOAT படத்தின் சாட்டிலைட் உரிமை விலை
தற்போது கோட் படத்தின் சாட்டிலைட் உரிமையை Zee நிறுவனம் வாங்கியுள்ளது. இந்த படத்தின் சாட்டிலைட் உரிமைக்கு விலையாக 93 கோடி விற்கப்பட்டதாக Indiaglitzல் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செய்தியை படத்தின் தயாரிப்பாளர்கள் தங்களது வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த படத்தில் மறைந்த நடிகரும் அரசியல்வாதியான கேப்டன் விஜயகாந்த் அவர்களை AI மூலமாக சேர்த்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த படம் செப்டம்பர் மாதம் 5ம் வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தளபதி விஜய்யின் 68வது படமான GOAT, சைன்ஸ் ஃபிக்சன் படமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் வெளியாகும்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]