வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் சைன்ஸ் ஃபிக்ஷன் திரைப்படம் – ‘GOAT’. இந்த படத்திற்கான ஆவலும் எதிர்பார்ப்பும் பல காரணங்களால் பெருகியுள்ளது.
அடுத்ததாக இந்த படத்தின் டிரெய்லர் பற்றிய செய்தி நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு இன்று அறிவித்துள்ளது. இந்த செய்தியை இன்று மாலை வெளியிட்டு ரசிகர்களுக்கு தீனி போட்டுள்ளார்கள்.

AGS தயாரிப்பு நிறுவனம் இந்த செய்தியை பதிவிட்டுள்ளார்கள். இரண்டு நாட்களாக தன்னுடைய X தளத்தில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அவர்கள் இப்படியான தகவலை ஒரு போஸ்டர் கூட வெளியிடாமல் வெளியிட்டுள்ளதும் இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
Trailer Release date update tomorrow at 6:00 pm 🤗❤️ @vp_offl We are all waiting 😎
— Archana Kalpathi (@archanakalpathi) August 13, 2024
நாளை The Greatest of All Time படத்தின் டிரெய்லர் அப்டேட் வெளியாவது விஜய் ரசிகர்களின் பொறுமையை சோதிப்பதாக உள்ளது. அடுத்த அப்டேட் பெரிதாக இருக்கவேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]