Home Cinema News GOAT- தளபதி விஜய் பிறந்தநாள் ட்ரீட்! 

GOAT- தளபதி விஜய் பிறந்தநாள் ட்ரீட்! 

 நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் GOAT படத்தின் புது அப்டேட் வீடியோ வெளியாகியுள்ளது. 

by Vinodhini Kumar

GOAT படத்தின் இரண்டாவது பாடல் இன்று வெளியாக உள்ள நிலையில் நேற்று இரண்டாவது பாடலின் முன்னோட்டத்தை சின்ன வீடியோவாக வெளியிட்டனர். உடன் மற்றொரு அப்டேட் வர உள்ளதாகவும் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்தார். 

நடிகர் விஜய்யின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் ரசிகர்களுக்கு GOAT படத்தின் பைக் சேஸிங் காட்சிகளை வெளியிட்டனர். இதில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் ஒரே பைக்கில் ஸ்டண்ட் செய்வதும், சண்டை காட்சிகளும் இடம்பெற்றது‌. சைன்ஸ் ஃபிக்ஷன் படமாக உருவாகும் என்ற தகவல் படி 2050 என்ற வருடம் இந்த வீடியோவில் இருப்பதையும் ரசிகர்கள் கண்டுபிடித்து அவர்களின் கருத்துக்களை வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

GOAT poster

செப்டம்பர் 5 வெளியாக உள்ள The Greatest Of All Time படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். உடன் சினேகா, லைலா, பிரசாந்த், மோகன் என பலர் நடித்துள்ளனர்‌. இந்த வீடியோவை போலவே இரண்டாவது பாடலுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பது உறுதி. கள்ளக்குறிச்சியில் நடந்த அசம்பாவிதத்தால் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடப் போவதில்லை என நடிகர் விஜய் அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது. 

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.