கோலிவுட்டில் தான் இயக்கி, நடித்த முதல் படமான ‘உறியடி‘ மூலம் அதிக கவனம் ஈர்த்தவர் விஜய் குமார். இந்த படத்துக்கு பிறகு ‘உறியடி 2’, ‘ஃபைட் கிளப்’ ஆகிய படங்களில் நடித்தார்.
Experience the thrill of the elections with the first single ELECTION Song from #ELECTION, Get ready to groove and vote with the ultimate anthem of democracy!https://t.co/eVOQX3j66H
— Reel Good Films (@Reel_Good_Films) April 16, 2024
🎵 #K
🎙️ #MukeshMohamed
🖋️ #GnanakaravelS#ElectionFirstSingle #RGF02 @Vijay_B_Kumar pic.twitter.com/B3bKkqdQqS
தற்போது, விஜய் குமார் ஹீரோவாக நடித்திருக்கும் புதிய படம் ‘எலக்சன்’. இந்த படத்தை இயக்குநர் தமிழ் இயக்கியுள்ளார். இதில் விஜய் குமாருக்கு ஜோடியாக ப்ரீத்தி அஸ்ரானி டூயட் பாடி ஆடியுள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ரிச்சா ஜோஷி, ஜார்ஜ் மரியன், பாவெல் நவகீதன், திலீபன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இதற்கு மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்துள்ளார், சி.எஸ்.பிரேம்குமார் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ‘ரீல் குட் ஃபிலிம்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.
சமீபத்தில், இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, இந்த படத்தில் இடம்பெறும் ‘எலக்சன்’ என்ற பாடல் வீடியோவை ரிலீஸ் செய்துள்ளனர். மிக விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]