Home Cinema News “கோலி சோடா ரைசிங்” என்று Web Series – ஆக மாறும் Vijay Milton – ன்  கோலி சோடா பார்ட் 3…

“கோலி சோடா ரைசிங்” என்று Web Series – ஆக மாறும் Vijay Milton – ன்  கோலி சோடா பார்ட் 3…

கோலி சோடா படத்தின் வெற்றியை தொடர்ந்து கோலி சோடா 2 படத்தை எடுத்த Vijay Milton தற்போது அதன் அடுத்த பாகத்தை  "கோலி சோடா ரைசிங்" என்ற பெயரில் Web Series - ஆக எடுக்கவுள்ளார். 

by Sudhakaran Eswaran

கோலி சோடா படத்தின் வெற்றியை தொடர்ந்து கோலி சோடா 2 படத்தை எடுத்த Vijay Milton தற்போது அதன் அடுத்த பாகத்தை  “கோலி சோடா ரைசிங்” என்ற பெயரில் Web Series – ஆக எடுக்கவுள்ளார். 

2006-ல் “அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது” என்ற படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் Vijay Milton அடுத்து கோலி சோடா, 10 எண்றதுக்குள்ள, கோலி சோடா 2, கடுகு போன்ற படங்களை இயக்கியுள்ளார். 

தற்போது இவர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான மழை பிடிக்காத மனிதன் படமும் நல்ல வரவேற்பை பெற்றது. 

அடுத்து இவர் இயக்கவுள்ள படத்தை வெப் சீரிஸ் ஆக எடுக்கவுள்ளார். ஏற்கனவே 2014 -ல் வெளியான கோலி சோடா படம் பெரிய ஹீரோக்கள் இல்லாமல் பசங்க  படத்தில் நடித்த கிஷோர், ஸ்ரீ ராம், பாண்டி போன்றவர்களை வைத்து ஹிட் தந்தார். 

மார்க்கெட்டில் வேலை செய்துவரும் சிறுவர்கள் சந்திக்கும் பிரச்சனையை ரசிக்கும் படியாக காட்டியிருந்தார். பின்னர் 2018-ல் சமுத்திரக்கனி, கெளதம் வாசுதேவ் மேனன் ஆகியோரை கொண்டு புதுமுக ஹீரோக்களை வைத்து கோலி சோடா 2 படத்தை எடுத்தார். 

முதல் பாகம் அளவிற்கு வரவேற்பை பெற தவறியது கோலி சோடா 2. தற்போது படமாக எடுத்து வந்த முதல் இரண்டு பாகத்தை தொடர்ந்து 3 பாகத்தை வெப் சீரிஸ் பாணியில் எடுக்கவுள்ளார். 

படங்களுக்கு இணையாக தற்போது வெப் சீரிஸை ரசித்து வரும் நிலையில் Vijay Milton இந்த ரூட்டுக்கு திரும்பியுள்ளார் என தெரிகிறது. 

குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் சார்பாக “கோலி சோடா ரைசிங்” என்ற பெயரில் வெப் சீரிஸ் வெளியாகவுள்ள நிலையில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மூலம் இந்த வெப் சீரிஸை வெளியாகவுள்ளது. கோலி சோடா ரைசிங் என்ற பெயரில் படத்தில் நடிக்கும் நடிகர்கள் கொண்ட போஸ்டர் ஒன்றை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது. 

இயக்குனர் சேரன், ஷாம், மதுசூதன் ராவ், அபிராமி, ரம்யா நம்பிசன், விஜய் டிவி புகழ், இமான் அண்ணாச்சி, அம்மு அபிராமி, சுஜாதா, பாண்டி, உதயா, சீதா ஆகியோர் கொண்ட புகைப்படம் வெளியிட்டிருந்தது. 

சேரன் கையில் துப்பாக்கியும், விஜய் டிவி புகழ் கையில் கத்தியும் வைத்திருந்தனர். படம் த்ரில்லர், வைலன்ஸ் கலந்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மராத்தி, மலையாளம், பெங்காலி, கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாகவுள்ளது. 

மேலும் வெளியாகும் தேதி, ட்ரைலர் குறித்த அப்டேட்கள் பத்தி வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.