கார்களின் மீது ஆர்வம் கொண்டு டாடா எஸ்டேட் கார் முதல் மினிகூப்பர், இனோவா, BMW என சொகுசு கார்கள் வரை வைத்துள்ளார் Vijay.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்துவரும் விஜய் வருங்காலத்தில் அரசியலிலும் எண்ட்ரி தரவுள்ளார் என்பது சினிமா மற்றும் அரசியல் என இரண்டு தரப்பில் உள்ளவர்களுக்கும் பெரிய தாக்கத்தை ஏற்படும் என தெரிகிறது.

MGR, ஜெயலலிதா, கேப்டன் விஜயகாந்த் ஆகியோர் மட்டுமே சினிமா, அரசியல் இரண்டிலும் வெற்றிகண்டவர்கள். அந்த வரிசையில் Vijay இடம் பெறுவாரா என காலம் தான் பதில் சொல்லவேண்டும். அரசியல் எண்ட்ரிக்கு பின்பு விஜய்யின் ஒவ்வொரு அசைவும் பெரிய அளவில் பேசுபொருளாக இருந்து வருகிறது.

அந்த வகையில் 10 மற்றும் 12 -ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பரிசு கொடுத்தது முதல், அதில் சாப்பாடு போட்டது வரை விஜய்யின் சிறு சிறு செயல்கள் கூட பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.
அதேபோல தற்போது வாங்கியுள்ள சொகுசு கார் தான் Vijay பற்றிய தற்போதை டாபிக். GOAT படத்தின் அப்டேட் வருவதை போல விஜய்யின் ஒவ்வொரு செயலும் ரசிகர்களால் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு Vijay -யின் சொகுசு காருக்கு முறைப்படி வரி செலுத்தவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டு பிரச்சினை நீதிமன்றம் வரை சென்றது. அதனை விற்பனை செய்ததாகவும் தகவல் வெளிவந்தது.
அவர் வைத்திருந்து பிரச்சனை ஆன கார் ரோல்ஸ் ராய்ஸ். அதனை விற்ற பிறகு தற்போது வாங்கியுள்ள புதிய சொகுசு கார் “லெக்சஸ் LM 350h” MPV என்ற கார் தான்.
தற்போது இந்திய அளவில் அதிக தொகைக்கு விற்பனையாகும் MPV கார் என்றால் இந்த “லெக்சஸ் LM 350h” தான். இந்த லெக்சஸ் Toyota நிறுவனத்தின் விலையுயர்ந்த மற்றும் சொகுசு கார் பிராண்டு.
இதில் 7 இருக்கைகள், 4 இருக்கைகள் என இரண்டு விதமாக உள்ளன. Vijay பெரும்பாலும் 4 இருக்கைகள் கொண்ட காரை வாங்கியுள்ளார் என தெரிகிறது. அதிக சொகுசு கொண்ட 4 இருக்கைகள் கொண்ட காரில் பின்பக்கம் அகலமான Touch Screen Display, மல்டிமீடியா சிஸ்டம், ஸ்பீக்கர், 3D சவுண்டு சிஸ்டம், ஒரு மினி குளிர்சாதன பெட்டி போன்ற வசதிகள் உள்ளன.
இந்த சொகுசு காரில் டைனிமிக் ரேடார் க்ரூஸ் கண்ட்கோல், லேன் டிராக்கிங் அசிஸ்ட், ஆட்டோமேட்டிக் ஹை பீம், சேஃப் எக்ஸிட் அசிஸ்ட், பிரேக் அசிஸ்ட் சிஸ்டம் ஆகிய பாதுகாப்பு வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. விஜய் வாங்கியுள்ள கார் ரூ.2.5 கோடி எக்ஸ்-ஷோரூம் விலை என தெரியவந்துள்ளது.

விரைவில் அரசியலுக்கு வரும் விஜய் GOAT படத்தை தொடர்ந்து இன்னும் ஒரு சில படங்கள் மட்டுமே நடிக்க வாய்ப்புள்ளது. நடிக்கவிருக்கும் சில காலங்கள் விஜய்யின் கண் அசைவு கூட கவனிக்கப்பட்டு வரும்.

லெக்சஸ் LM 350h” MPV காரின் உள்பக்கம், வெளிப்பக்க அமைப்பு.




Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]