தமிழ் நாட்டில் அரசியலுக்கும் சினிமாவிற்கு பெரிய ஒற்றுமை இருப்பது நாம் அறிந்ததே. அதிலும் முன்னணி நடிகர்கள் அரசியலில் இறங்கி ரசிகர்களுக்காக மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவதும் காலம் காலமாக நடப்பது தான். திரையில் புரட்சிகரமான வசனங்களையும் கருத்துகளையும் பேசியவர் எம். ஜி. ஆர். அரசியலில் இறங்கி அந்த சிந்தனைகளை மக்களிடம் கொண்டு செல்ல கட்சியில் சேர்ந்து வெற்றிகரமான அரசியல்வாதியாக இருந்தவர். அவரை போல் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முதலியோர் அரசியலில் மாபெரும் வெற்றி கண்டவர்கள்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 1988ல் ‘தமிழக முன்னேற்ற முன்னணி’ என்ற கட்சியை தொடங்கி அடுத்த ஆண்டே அதை கலைத்துவிட்டார். நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியை 2018 லவ் தொடங்கினார். பெரியளவில் தேர்தலில் வெற்றியடையவில்லை என்றாலும் கூட்டணி அமைத்துப் அரசியலில் வலம் வருகிறார். கேப்டன் விஜயகாந்தின் ‘தேசிய முற்போக்கு திராவிட கழகம்’ கட்சியை உருவாக்கி எதிர் கட்சி தலைவராக பதவி வகித்தார். திரையில் புரட்சிகரமான கருத்துகளை காட்டி அதனுடைய நீட்சியாக அரசியலில் இறங்கிகயவர்கள் வரிசையில் சமீபத்தில் சேர்ந்தவர் நடிகர் விஜய்.

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக வெற்றி படங்களை தந்து மக்கள் மனதில் ‘தளபதி’ என்று கொண்டாடப்படுபவர் நடிகர் விஜய். எல்லா முன்னணி ஹீரோக்களை போல நடிகர் விஜய்யும் புகழின் உச்சியில் இருக்கும் போது படங்கள் வழியாக அரசியலில் நுழைவதை பற்றி சாடையாக பேசினார். 2024ல் அந்த பேச்சுக்கு முற்று புள்ளி வைத்து, சுயமாக கட்சியை தொடங்கினார். ‘தமிழக வெற்றிக் கழகம்’ என பெயரிடப்பட்ட கட்சியின் அதிகாரப்பூர்வ தலைவரானார் நடிகர் விஜய்.
வரலாற்றில் முதல் முறையாக ஒரு கட்சியின் ஆரம்பத்தை சமூக வலைதளங்களில் அறிவித்தார் Vijay. இயல்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெளியாகும் செய்தியை புதுமையாக வெளியிட்டார். அவரின் மற்றொரு புதுமை ‘திராவிடம்’ என்பதை தன்னுடைய கட்சி பெயரில் சேர்க்காமல் இருப்பது. திராவிட கட்சிகளுக்கென தனி பெயரும் ‘திராவிடம்’ என்பதை தென்னிந்தியாவுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, நடிகர் விஜய் இதை சேர்க்காதது சர்ச்சையானது. தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை கோட்பாடுகளை வெளியிடாமல் இருப்பதும் இந்த சர்ச்சைக்கு உதவவில்லை. நடந்து முடிந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல், நேரடியாக 2026 தேர்தலில் போட்டியிடும் முடிவும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

Vijay சுயமாக அரசியல் கட்சியை தொடங்கி, முதற்கட்டமாக பள்ளி மாணவர்களுடன் ஒரு சந்திப்பு நிகழ்த்தினார். தற்போது மற்றுமொரு மாணவர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யும் நோக்கத்தின் பின்னணி என்னவாக இருக்கும்? ஏற்கனவே தனக்கு சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை ஆரம்பத்திலேயே சாதகமாக்கும் திட்டமாகவே இந்த சந்திப்புகள் தெரிகிறது. மற்ற கட்சிகளை போலவே பொதுவான சமூக பிரச்சினைகளை நடிகர் விஜய் குறிவைப்பதாக தெரிகிறது. பிரிவினை, ஊழல், வாரிசு அரசியல், காவேரி பிரச்சினைகளை, நீட் தேர்வின் தீரா வாதம் என தனக்கென தனி ரூட்டை பிடிக்காமல், தேர்தலில் போட்டியிடும் தேதியை மட்டும் முன்னரே கூறுவதை புதுமையாக எடுத்துக் கொள்ள முடியாது.

படப்பிடிப்புக்காக வெளி மாநிலத்துக்கு சென்றாலும் அவருக்காக லட்சக்கணக்கான மக்கள் காத்திருப்பது, ஒரு தீவிரமான hero worshipக்கு நடிகர் விஜய் ஆளாகியிருப்பதும் இதற்கு முன் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் இடம் பார்த்தது. இருவரும் சினிமா துறையில் புகழின் உச்சியில் இருக்கும் போது அரசியலில் இறங்கிகயவர்கள். இந்த இருவரின் அரசியல் பிரதேசமும் பெறிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பதும் சில ஒற்றுமைகள்.
நடிகராக இருப்பதை தாண்டி மத்திய மாநில அரசுக்கு இடையே மதம் சார்ந்த அரசியல் இருப்பதும் இதற்கு முன் அவருடைய மத நம்பிக்கைகள் பற்றி கேள்வி எழுந்தது. ஆனால் சாதி மத பேதமில்லாமல் ‘பிளவுவாத அரசியல் கலாச்சாரத்தை’ எதிர்ப்பதை தீவிரமாக கையில் எடுக்க உள்ளாராம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் . ‘பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பதை கடைப்பிடிக்கும் நோக்கில் தன்னுடைய இயற்பெயரை பயன்படுத்தாமல் விஜய் என்றே பிரஸ் நோட்டிஸ்களில் கையொப்பம் இடுவதும் வரவேற்க்கப்பட்டது.

தமிழ் சினிமாவில் நடிகராக விஜய் பார்க்காத உயரம் இல்லை. இதை அவருக்கு சாதகமாக எவ்வளவு தூரம் அமைகிறதோ அதே நேரத்தில் பாதகமாகவும் அமையும். அவர் மீது உண்டாகும் எதிர்பார்ப்புகளை சந்திப்பாரா? முறியடிப்பாரா? அல்லது மற்ற முன்னணி நடிகர்களை போல் கட்சியை மட்டும் தொடங்கி சொந்த வேலைகளை செய்வாறா என்பதின் பதில் காலத்திடம் தான் உள்ளது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]