Home Cinema News தமிழக அரசியலை அதிர வைக்கும் Vijay…கட்சிக்கொடியை அறிமுக படுத்துகிறாரா?…

தமிழக அரசியலை அதிர வைக்கும் Vijay…கட்சிக்கொடியை அறிமுக படுத்துகிறாரா?…

சினிமா வட்டாரத்தில் மட்டுமல்ல, அரசியல் வட்டாரத்திலும் Vijay-யின் ஒவ்வொரு அசைவும் தற்போது பேசுபொருளாக இருந்து வருகிறது. அந்த வகையில் தனது கட்சி கொடியை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

by Sudhakaran Eswaran

சினிமா வட்டாரத்தில் மட்டுமல்ல, அரசியல் வட்டாரத்திலும் Vijay-யின் ஒவ்வொரு அசைவும் தற்போது பேசுபொருளாக இருந்து வருகிறது. அந்த வகையில் தனது கட்சி கொடியை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Vijay, வெங்கட் பிரபு கூட்டணியில் GOAT படம் வரும் செப்டம்பர் 5 -ல் வெளியாகவுள்ள நிலையில் விஜய்யின் அடுத்த கட்ட நகர்வை அனைவரும் கவனித்து வருகின்றனர். அடுத்த நகர்வு அரசியலை நோக்கியா?, சினிமாவை நோக்கியா? என்பது தான் கேள்வி. இரண்டையும் பேலன்ஸ் பண்ணும் விதமாக சினிமாவில் விஜய் 69 படத்தின் அப்டேட் அவ்வப்போது வெளியாகியுள்ளது. 

image 44

அதேபோல அரசியலில் கட்சி வேலைகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என அது ஒரு பக்கம் நடந்து வருகிறது, இதற்கிடையே தற்போது தமிழக அரசியல் களத்தில் விஜய் முழுவதும் ஈடுபடாமல் இருந்து வருகிறார்.  

தற்போதைய ஹாட் டாபிக்காக இருப்பது  Vijay ஆகஸ்ட் 22-ல் தனது கட்சி கொடியை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பனையூரில் தனது கட்சி அலுவலகத்தில் விஜய்யின் முகம் பதித்து கொடி முழுவதும் மஞ்சள் நிறத்தில் இருந்த கொடியை ஒத்திகைக்காக ஏற்றப்பட்டது. 

twittervid.com actorvijay 493993

முழுவதும் மஞ்சள் நிறத்தில் நடுவில் வாகை மலரில் விஜய்யின் முகம் பதித்த கொடி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் தமிழக வெற்றிக்கழகத்தின் அதிகாரப்பூர்வமான கொடி இது தான் என்று  உறுதிப்படுத்த வில்லை. 

2026 தமிழக சட்ட மன்ற தேர்தலை கருத்தில் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட Vijay-யின் தமிழக வெற்றிக்கழகம்  கட்சி கொடியோ, சின்னம் பற்றிய தகவலோ வெளிவரவில்லை. தற்போது கட்சி கொடிக்கான அப்டேட் வந்த நிலையில் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 

மேலும் கட்சியின் முதல் மாநாடு இன்னும் நடத்தப்படாத நிலையில் அதற்கான அறிவிப்பும் வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

அரசியலில் தன்னை நிரூபிக்க வேண்டும் என முதல் மாநாடே பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. ஆகஸ்ட் 22-ல் முக்கிய நிர்வாகிகளை அழைத்து கொடியை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிகிறது. 

பனையூரில் உள்ள அலுவலகத்திற்கு வந்த விஜய்யை புஸ்சி ஆனந்த் மஞ்சள் நிற வெட்டி சட்டையில் வரவேற்றும், கட்சிக்கொடியை ஏற்றி ஒத்திகை பார்க்கப்பட்டதாகவும் வீடியோ வெளியாகியுள்ளது.

கட்சி கொடியை அறிமுகப்படுத்தவுள்ள நிலையில் ஆகஸ்ட் 22-ஆம் தேதி காலை 11 மணியளவில் நிர்வாகிகள் பனையூரில் உள்ள அலுவலகத்திற்கு வரும்படி அறிவுறுத்தியுள்ளது.

இதற்காக முக்கிய நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் போன்றோருக்கும் அழைப்பு விடுத்ததாக தெரிகிறது. சில நாட்களுக்கு முன்பு விஜய் வாங்கிய காரை பற்றிய பேச்சு எழுந்துவந்த நிலையில் தற்போது விஜய்யின் கட்சி கொடி பற்றிய தகவல் பேசுபொருளாக மாறியுள்ளது. 

GOAT படக்குழுவுடன் விஜயகாந்த் இல்லத்திற்கு சென்று அவருக்கு மரியாதையை செலுத்தி விட்டு பிரேமலதா மற்றும் விஜயகாந்த்தின் இரண்டு மகன்களையும் சந்தித்து பேசியுள்ளார்.விஜய் இன்னும் ஒன்று, இரண்டு படங்கள் மட்டுமே நடிக வாய்ப்பு உள்ளதாகவும், வரும் காலங்களில் அரசியலில் முழு கவனம் செலுத்தவுள்ளதாகவும் தெரிகிறது. 

விஜய் பற்றிய அப்டேட் வந்தால் அது சினிமாவாக இருந்தாலும் சரி, அரசியலாக இருந்தாலும் சரி விஜய் ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர். 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.