Home Cinema News vijay sethupathi விளையாடும் “ACE” படத்தின் டீஸர்…

vijay sethupathi விளையாடும் “ACE” படத்தின் டீஸர்…

vijay sethupathi தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் ACE படத்தின் டைட்டில் டீஸர் வெளியானது. 

by Sudhakaran Eswaran

vijay sethupathi தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் ACE படத்தின் டைட்டில் டீஸர் வெளியானது. 

எந்த ஓரு சினிமா பின்புலமும் இல்லாமல் தனது திறமையை வைத்து சினிமாவில் முத்திரை படைத்தவர் விஜய் சேதுபதி. ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த படம் முதல் இன்றுவரை வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அட்லீ இயக்கத்தில் ஷாருக் கானின் ஜவான் படத்தில் வில்லனாக கலக்கியிருப்பார். சமீபத்தில் ஹிந்தி நடிகை கத்ரீனா கைஃப் உடன் நடித்த மெரி கிறிஸ்துமஸ் படம் நல்ல வரவேற்பை பெற்றது. 

Untitled design 5 3

தனது 50-வது படமான மகாராஜா படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. தேதி முடிவு செய்ய்யப்படாத நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழாவில் மகாராஜா படம் திரையிடப்பட உள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 படத்தில் நடித்து வருகிறார். 

தொடர்ந்து படங்களில் பிஸியாக இருந்து வரும் விஜய் சேதுபதியின் 51-வது படமான ACE படத்தின் டைட்டில் டீஸர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை அறுமுககுமார் கதை எழுதி தயாரித்து இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதியுடன் “ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்” படத்தை இயக்கியுள்ளார். இசையமைப்பாளராக ஜஸ்டின் பிரபாகரன், எடிட்டர் கோவிந்தராஜ் மற்றும் 7 CS என்டர்டைன்மெண்ட் pvt. Ltd நிறுவனம் தயாரித்துள்ளது. 

ACE படத்தில் விஜய் சேதுபதியுடன் யோகி பாபு, ருக்மணி வசந்த், பப்லு பிரித்விராஜ், பி.எஸ்.அவினாஸ், திவ்யா பிள்ளை ஆகியோரும் நடித்துள்ளார். டீசரில் படத்தின் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவராக அறிமுகம் செய்யப்பட்டது. இறுதியில் விஜய் சேதுபதியை மிரட்டலாக காட்டியுள்ளார். 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.