எதார்த்த நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த Vijay Sethupathi மற்றும் Nithya Menen ஆகியோர் இணைந்து நடிக்கும் போது எதார்த்த சினிமாவை ரசிக்கும் படியாக தருவார்கள் என எதிர்பார்க்கலாம்.
தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ் என பிஸியாக நடித்து வரும் Nithya Menen தமிழில் காஞ்சனா 3, ஓ காதல் கண்மணி, 24, இருமுகன், மெர்சல் என தனது கேரக்டருக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்துள்ளார்.
மேலும் தனுஷ் உடன் திருச்சிற்றம்பலம் படத்தில் மிகவும் எதார்த்தமான நடிப்பின் மூலம் ஷோபனா கேரக்டர் படம் ரிலீஸ் ஆன சமயமே இப்படி ஒரு லைப் பார்ட்னர் கிடைக்க வேண்டும் என ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.

70 – வது தேசிய விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகைக்கான தேசிய விருது திருச்சிற்றம்பலம் படத்தில் ஷோபனா கேரக்ட்டருக்காக நித்யா மேனனுக்கு வழங்கப்பட்டது.
Nithya Menen சற்றும் பருமனான தோற்றமாக இருந்தாலும் கதைக்கு ஏற்றவாறு தனது படங்களில் எதார்த்த நடிப்பு என்பதை வெளிப்படுத்தி அவரது நடிப்பை பாராட்டும் படியாக செய்து வருகிறார்.
ஹீரோயின்கள் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்ற வரைமுறையை மாற்றிய சிலரில் நித்யா மேனனும் ஒருவர் என்றே கூறலாம்.
இவருடன் தனது எதார்த்த நடிப்பால் பாலிவுட் வரை சென்று அங்கும் வெற்றி கண்ட Vijay Sethupathi இணைந்து நடிக்கும் போது இவர்களின் காம்பினேஷன் கலக்கலாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Vijay Sethupathi நடிப்பில் கடைசியாக வெளியான மகாராஜா படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து Train, Ace, விடுதலை 2 என வரிசை கட்டி படங்களை வைத்துள்ள விஜய் சேதுபதி, பாண்டியராஜ், நித்யா மேனன் ஆகியோர் கூட்டணியில் வரும் அடுத்த படத்திற்கான அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

பசங்க, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மெரினா, நம்ம வீட்டு பிள்ளை,கடைக்குட்டி சிங்கம், எதற்கும் துணிந்தவன் என ரசிக்கும் படியான கதைகளை இயக்கியுள்ளார் பாண்டியராஜ்.
இவர்கள் மூன்று பெரும் தனித்தனியாக ரசிக்கும் படியான படைப்புகளை தந்து வந்த நிலையில் தற்போது இவர்களது காம்போவில் வெளியாகும் படம் புதுவித கான்செப்டில் ரசிக்கும் படியாகவே இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இதற்க்கு முன்பு Vijay Sethupathi மற்றும் நித்யா மேனன் ஆகியோர் 19 (1) (ஏ) என்ற மலையாள படத்தில் நடித்துள்ளனர். ஆனால் இருவரும் இணைந்து நடித்த காட்சிகள் குறைவாகவே இருந்தது.
விஜய் சேதுபதியுடன் நடிக்க வேண்டும் என நினைத்த நித்யா மேனன், இருவரும் சேர்ந்து படம் பண்ணும் வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளதாகவும், இந்த கதை போன்று வேறு சிறப்பான கதை எனக்கு அமையாது எனவும் கூறியிருந்தார்.

மேலும் இந்த கதைக்காக விஜய் சேதுபதி இதுவரை நடிக்காத பரோட்டா மாஸ்டர் கேரக்ட்டரில் நடிக்கவுள்ளதாகவும், அதற்காக பயிற்சி எடுத்த வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு பக்கம் நித்யா மேனன் இப்படி ஒரு ஸ்ரிக்ப்ட் நடிப்பதற்கு கிடைக்காது எனவும், மறு பக்கம் விஜய் சேதுபதி பரோட்டா செய்ய பயிற்சி எடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகும் நிலையில் இப்போதே படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இந்தப் படத்தின் சூட்டிங் சென்னையில் விரைவில் தொடங்கவுள்ளது. மேலும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளதாக தெரிகிறது. வரும் நாட்களில் மேலும் சில அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]