‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’, ‘karma is a boomerang’ என்கிற அடிப்படை தத்துவத்தின்படி படத்துக்கான கதையை எழுதியிருக்கிறார் இயக்குநர் நித்திலன். சலூன் கடை நடத்தும் மகாராஜன் என்கிற கேரெக்டரில் 40-களில் வாழும் நபராக நடித்திருக்கிறார் விஜய்சேதுபதி.

Vijay Sethupathi’யின் 50-வது படமாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட படம் ‘மகாராஜா’. ‘குரங்கு பொம்மை’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் நித்திலனின் இரண்டாவது படம்தான் ‘மகாராஜா’. இந்தப் படத்தின் ஷூட்டிங் முழுமையாக முடிந்துவிட்ட நிலையில் படத்தின் ரிலீஸ் எப்போது என ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள் விஜய் சேதுபதி ரசிகர்கள்.
ஹீரோ, வில்லன், கேமியோ என எந்த ரோலாக நடித்துக்கொண்டிருந்த விஜய் சேதுபதி இப்போது கதைத்தேர்வில் கவனமாக இறங்கிவிட்டார். இதுதான் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை குறைந்ததற்கு காரணம். தற்போது ‘விடுதலை-2’ மற்றும் ‘மகாராஜா’ படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்துவருகிறார் விஜய் சேதுபதி.
இதில் ‘விடுதலை’ வெற்றிமாறனின் படம் என்பதால் அந்தப்படம் குறித்து விஜய் சேதுபதிக்கு பெரிதாக கவலை இல்லை. ‘மகாராஜா’ குறித்துத்தான் அதிக ஆர்வத்தோடு இருக்கிறார் விசே. காரணம் ‘குரங்கு பொம்மை’ படத்தின் மூலம் மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்ற நித்திலனின் இரண்டாவது படம் என்பதோடு, கதையும் வித்தியாசமான கதைக்களம் என்பதால் மகாராஜாவின் ரெஸ்பான்ஸுக்காக விசே-வே ஆர்வத்தோடு காத்திருக்கிறார். இந்தப்படத்தின் ரிலீஸ் வரை வேறு எந்தப்படங்களிலும் கமிட் ஆகாமல் தவிர்த்துவருகிறார்.

படத்தின் ரிலீஸுக்கு முன்பாகவே ”மகாராஜா’ படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸும், சேட்டிலைட் உரிமையை விஜய் டிவியும் வாங்கியிருக்கின்றன.
‘மகாராஜா’ படத்தில் விஜய் சேதுபதியுடன் அனுராக் காஷ்யப், அபிராமி, மம்தா மோகன்தாஸ், பாரதிராஜா, நட்டி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். திரில்லர் படமான இதற்கு கன்னடத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த ‘காந்தாரா’ படத்தின் இசையமைப்பாளர் அஜனீஷ் இசையமைத்திருக்கிறார். இவர்தான் ‘குரங்கு பொம்மை’ படத்துக்கும் இசையமைத்தவர்.
இடிந்த கட்டடத்துக்குள், சலூன் நாற்காலியில் விஜய் சேதுபதி உட்கார்ந்திருப்பதுபோலவும், அவர் கையில் ரத்தம் தோய்ந்த பட்டா கத்தி ஒன்று இருப்பதுபோலவும் கடந்த ஆண்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருந்தது. ஆனால், அதன்பிறகு இந்தப்படம் குறித்த செய்திகளோ, டீஸரோ, ட்ரெய்லரோ வெளியாகிவில்லை. காரணம், படத்தின் கதை கசிந்துவிடக்கூடாது என கவனமாக இருக்கிறது படம் குழு. அதனாலேயே ட்ரெய்லரையும் தள்ளிப்போட்டு வந்தவர்கள் விரைவில் ட்ரெய்லரை வெளியிட இருக்கிறார்கள்.
சாதாரணமாக சலூன் கடை நடித்திவரும் ஒரு 40 வயது நபரான மகாராஜன் ஒரு விபத்தின்மூலம் பெரிய பிரச்சனைக்குள் சிக்குறார். அந்தப்பிரச்சனை என்ன, அந்தப் பிரச்சனைக்குள் அவர் போய் ஏன் சிக்கினார் என்பதைக் கண்டுபிடிக்கும்போது மகாராஜனுக்கே தன்னைப்பற்றிய இன்னொரு உண்மை தெரியவருவதுதான் படத்தின் முக்கிய கதை.
மகாராஜா படம் மே 16-ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது என்பதுதான் விசே ரசிகர்களுக்கு மட்டுமல்ல தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் சந்தோஷமான செய்தி.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]